தமிழக விவசாயிகளுக்கு ரூ.350 கோடி உதவி: ஜெ. அறிவிப்பு
சென்னை:
தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்காக ரூ.350 கோடிக்கான உதவிகளைமுதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும் நிலவரிகளை வசூல் செய்வதில் தீவிரம் காட்டவேண்டாம் என்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்த தமிழக அரசு, அவர்களுக்குபல்வேறு மானியங்கள் அளிக்கப்படும் என்று கூறியது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில்வெளியிடப்படும் என்று ஜெயலலிதா கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று சட்டசபையில், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நிதிஉதவிகளை ஜெயலலிதா அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.350 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வறட்சியால் 50 சதவீதம் பாசனப் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்குரூ.2,500 வழங்கப்படும். நிரந்தரப் பயிர்கள் பயிரிட்டு 50 சதவீதம் பாதிப்படைந்த விவசாயிகளுக்குஹெக்டேருக்கு ரூ.4,000 வழங்கப்படும்.
மேலும் மானாவரி பயிர்களைப் பயிரிட்டு பாதிப்படைந்த விவசாயிகளுக்கு ரூ.1,000அளிக்கப்படும். இதைத் தவிர பட்டுப் போன தென்னை மரத்திற்கு ரூ.50 முதல் ரூ.150 வரை நிதிவழங்கப்படும்.
மேலும் விவசாயிகளுக்கான குறுகிய கால கடன் மீதான வட்டி ரத்து செய்யப்படுகிறது. மேலும்ஜூலை 2002 முதல் ஜூன் 2003 வரையிலான நில வரியும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
வரும் ஏப்ரல் மாதம் முதல் விவசாயிகள் இந்தச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றுஅவ்வறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications