அமெரிக்க வீரர்களை விரட்டி அடிக்கும் ஈராக் படைகள்
மத்திய ஈராக்:
ஈராக்கில் நுழைந்துள்ள அமெரிக்கப் படையினரை ஈராக் படைகளுடன் மக்களும் விவசாயிகளும்கூட சேர்ந்து கொண்டு தாக்கி விரட்டி அடித்து வருகின்றனர் என்று அந்நாட்டு செய்தி அமைச்சர்முகமது சயீத் சகாப் கூறியுள்ளார்.
இன்று நிருபர்களிடம் அவர் பேசுகையில், ஒரு அமெரிக்க டாங்க்கைத் தகர்ப்பதற்கு ஈராக்படைகளுக்கு சாதாரண மக்களும் உதவினார்கள். ஒரு விவசாயி கிரனைட் உதவியுடன் அமெரிக்கப்படையினர் மீது ராக்கெட் வீசித் தாக்கியுள்ளார்.
இப்போது மக்களும் விவசாயிகளும் கூட சேர்ந்து கொண்டு அமெரிக்க, பிரிட்டிஷ் படைகளைக்கடுமையாக எதிர்த்து தாக்கி வருகின்றனர்.
ஈராக் படைகளும் மக்களும் எதிரிப் படைகளைப் படிப்படியாக அழித்து வருகிறார்கள். நஸாப்நகரிலும் இதே கதிதான் அமெரிக்கப் படைகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஈராக் படைகளின் பதிலடித்தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் எதிரிகள் அந்நகரை விட்டே தப்பித்து ஓடிவிட்டனர்.
ஈராக்கில் உள்ள அப்பாவி மக்கள் மீது அமெரிக்கர்கள் கோழைத்தனமாகத் தாக்கி வருகின்றனர்.மக்கள் வசிக்கும் பகுதிகள் மீதுதான் கொத்துக் கொத்தாக அவர்கள் குண்டுகளை எறிந்துகொண்டிருக்கின்றனர்.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரான டொனால்ட் ரம்ஸ்பீல்ட் மடத்தனமான நடவடிக்கைகளைஎடுத்து வருகிறார். ஆனால் அவர்கள் தோற்று ஓடப் போவது உறுதி
போர் தொடங்கியதிலிருந்து இந்த ஒன்பது நாட்களில் பாஸ்ராவில் மட்டும் 116 ஈராக்கியர்கள்கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 659 பேர் காயமடைந்துள்ளனர் என்றார் சயீத்.
பாக்தாத்தில் குண்டு மழை:
இதற்கிடையே ஈராக்கின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் அமெரிக்க, பிரிட்டிஷ் விமானங்கள்தொடர்ந்த குண்டு மழை பொழிந்து வருகின்றன.
நேற்று இரவிலிருந்து இன்று அதிகாலை வரையிலும் பாக்தாத் மீது அமெரிக்க விமானங்கள்சராமாரியாகக் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தின. குறிப்பாக பாக்தாத்தின் தென்கிழக்குப்பகுதிகளில் அதிகமான குண்டுகள் வீசப்பட்டன.
குண்டுகள் வெடித்ததில் டைக்ரிஸ் நதியின் கரைப் பகுதிகள் கடுமையாக அதிர்ந்தன. நசிரியாநகரின் சுற்றுப் பகுதிகளில் அமெரிக்க மெரைன் வீரர்களுக்கும் ஈராக் வீரர்களுக்கும் இடையே கடும்போர் நடந்தது.
சுமார் 90 நிமிடங்களுக்கு நீடித்த இந்தச் சண்டையில் சில அமெரிக்க மெரைன் வீரர்கள் படுகாயம்அடைந்தனர்.
நஜாப் நகரைக் கைப்பற்றுவதற்காக அமெரிக்கப் படையினர் முயற்சித்த போது அவர்களை ஈராக்வீரர்கள் பதிலடித் தாக்குதல் நடத்தித் துரத்தியுள்ளனர். அப்போது பல அமெரிக்க டாங்குகளையும்ஈராக் படையினர் அழித்து விட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் சுல்தான் ஹாசிம் அகமதுகூறினார்.
இதற்கிடையே பாஸ்ரா நகரில் பிரிட்டிஷ் படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன. நேற்றுமட்டும் 14 ஈராக்கிய டாங்குகளை பிரிட்டிஷ் படைகள் தகர்த்து எறிந்துள்ளன.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications