கீரிப்பட்டியிலும் தேர்தல் ரத்து
மதுரை:
கீரிப்பட்டியில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்த 2 பேர் நேற்று தங்கள் மனுக்களை வாபஸ்பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து அங்கு நடைபெற வேண்டிய பஞ்சாயத்துத் தேர்தல் மீண்டும்ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் கீரிப்பட்டி, பாப்பாபட்டி மற்றும் நாட்டார்மங்கலம் ஆகிய தலித் பஞ்சாயத்துத்தொகுதிகளில் வரும் ஏப்ரல் 7ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
உயர் ஜாதியினரின் மிரட்டல் காரணமாகக் கடந்த ஏழு ஆண்டுகளா இந்த மூன்று தொகுதிகளில்பஞ்சாயத்து தலைவர்களே தேர்ந்தெடுக்கப்படவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலதலைவர்களும் உயர் ஜாதியினர் மிரட்டல் காரணமாகத் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிடுகின்றனர்.
இம்முறை அறிவிக்கப்பட்ட தேர்தலில் பாப்பாபட்டி மற்றும் நாட்டார்மங்கலத்தில் யாருமே வேட்புமனு கூடத் தாக்கல் செய்யவில்லை. இதனால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டு விட்டது.
கீரிப்பட்டியில் க. சுப்பன் மற்றும் அ. சுப்பன் ஆகிய இருவர் மட்டுமே வேட்பு மனுக்களைத் தாக்கல்செய்திருந்தனர். இருவர் மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டும் விட்டன.
இந்நிலையில் நேற்று தங்கள் கிராம மக்களுடன் யூனியன் அலுவலகத்திற்குச் சென்ற இருசுப்பன்களும் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர். இந்த தலித் பஞ்சாயத்துத்தொகுதியைப் பொதுத் தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்கிறோம் என்று இருவரும் கூறியதும் அதிகாரிகள் விக்கித்துநின்றனர். பின்னர் வேறு வழியில்லாமல் அவர்களுடைய மனுக்களைத் திருப்பிக் கொடுத்தனர்.
இதனால் கீரிப்பட்டியிலும் இந்த முறை தேர்தல் நின்று விட்டது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications