தூக்கு தண்டனை கைதியை மணக்க விரும்பும் காதலி
சென்னை:
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு கைதியாக உள்ள தன் காதலரைத் திருமணம் செய்து கொள்ளஅனுமதிக்குமாறு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பெண் மனு தாக்கல் செய்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் பூங்குளத்து விளை என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஷகீதா. இவரும் ஷேக்மீரான் என்பவரும் காதலித்து வந்தனர். ஷேக் மீரானைக் கல்யாணம் செய்து கொள்வதற்காகவேஇந்து மதத்திலிருந்து முஸ்லீமாக மாறியவர் ஷகீதா.
இந்நிலையில்தான் விதி விளையாடியது. கொலை வழக்கு ஒன்றில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுதிருநெல்வேலி சிறையில் அடைக்கப்பட்டார் மீரான்.
ஆனாலும் காதலன் மேல் தளராத நம்பிக்கையுடன் இருந்த ஷகீதா, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தார். தன் காதலரைத் திருமணம் செய்து கொள்வதற்காக 10நாட்களுக்கு அவரை பரோலில் விடுதலை செய்யுமாறு கோரினார்.
ஆனால் மாநில அரசிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தைத் தற்போது அணுகியுள்ளார் ஷகீதா. அவருடைய மனுவை விசாரித்த நீதிபதிசதாசிவம், இது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மாநில அரசுக்குஉத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே ஷேக் மீரானுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம்,உச்ச நீதிமன்றம் ஆகியவை ஏற்கனவே உறுதி செய்துள்ளன. இதைத் தொடர்ந்து ஆளுநருக்குகருணை மனு அனுப்பினார் மீரான். அதுவும் நிராகரிக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் கடைசி முயற்சியாகக் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியுள்ளார் மீரான்.அதன் மீது இன்னும் முடிவு அறிவிக்கப்படவில்லை.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications