மாறன் சிகிச்சை செலவு: சட்டசபையில் திமுக-அதிமுகவினர் மோதல்
சென்னை:
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் மத்திய அமைச்சர் முரசொலி மாறனுக்கு ஆகும் செலவுகள்தொடர்பாக இன்று தமிழக சட்டசபையில் திமுக, அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே காராசாரமானவிவாதம் நடந்தது.
தமிழக பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் நடந்து வருகிறது. இந்நிலையில் அதிமுகஉறுப்பினர் ஒருவர் எழுந்து மாறனின் மருத்துவச் செலவுகள் குறித்து அறிந்து கொள்ளவிரும்புவதாகக் கூறினார்.
அப்போது திமுக உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி எழுந்து, "இந்தக்கேள்வியை இங்கே எழுப்புவது சரியல்ல. அதுவும் மாறன் இன்னும் அமெரிக்காவில் சிகிச்சைபெற்று வரும் நிலையில் கேட்பது முறையல்ல" என்றார்.
உடனே முதல்வர் ஜெயலலிதா எழுந்து, "வீராசாமி இவ்வாறு பேசுவதுதான் தவறு. நாட்டு மக்களின்வரிப் பணத்திலிருந்து மாறனின் மருத்துவத்துக்காகச் செலவு செய்யப்படுகிறது. எனவேஇந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்தக் கேள்வியைக் கேட்க உரிமை உண்டு" என்றார்.
அப்படியே உரிமை இருந்தாலும் இந்தக் கேள்வி நாடாளுமன்றத்தில் கேட்கப்பட வேண்டியகேள்வியே தவிர இங்கு கேட்டிருக்கக் கூடாது என்று கூறிய சட்டசபை திமுக துணைத் தலைவரானதுரைமுருகன், "இது தொடர்பாக அதிமுக எம்.பிக்கள் கடந்த சில நாட்களுக்கு முன் மக்களவையில்கேள்வி எழுப்பினார்கள். அதற்கு மத்திய அரசும் உரிய பதிலை அளித்து விட்டது" என்றார்.
இதைத் தொடர்ந்து அந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்தது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications