போரால் எந்தப் பிரச்சனையும் தீராது: வாஜ்பாய்
Subscribe to Oneindia Tamil
சித்ராகூட்:
எந்த ஒரு போரும் அழிவை ஏற்படுத்துமே தவிர அதனால் எந்த ஒரு பிரச்சனையும் தீரவே தீராது என்று பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.
ஈராக் மீது அமெரிக்கா தீவிரப் போர் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் வாஜ்பாய் இவ்வாறு கூறியுள்ளார். இந்தப் போரை இந்தியாவும் தீவிரமாக எதிர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
காமாத்கிரி கோவிலில் வழிபாடு செய்த பின்னர் நிருபர்களிடம் பேசிய வாஜ்பாய்,
ராமாயணத்தில் குடும்பத்துக்குள் ஏற்பட்ட சண்டை காரணமாக அரியணையைத் துறந்து காட்டுக்குச் சென்றான் ராமன். அதன் பின்னர்தான் இலங்கையில் ராவணனுடன் அவன் போர் புரிந்தான்.
ஆனாலும் எந்தப் போரும் எந்தப் பிரச்சனைகளுக்கும் தீர்வைக் கொடுப்பதில்லை. ஆயுதங்கள் வாழ்வை அழிக்கத்தான் செய்யும்.
அதே ஆயுதங்களால் வாழ்வை அளிக்க, அதாவது உருவாக்க ணிடியாது என்றார் வாஜ்பாய்.












Click it and Unblock the Notifications