கார் குண்டு வெடித்து 5 அமெரிக்க வீரர்கள் சாவு
நஜாப்:
ஈராக்கின் மத்தியப் பகுதியில் உள்ள நஜாப் நகரில் அமெரிக்கப் படைகள் மீது இன்று நடந்த தற்கொலைப் படைத்தாக்குதலில் 5 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்க மெரைன் படைகளின் முதலாவது பிரிகேடைச் சேர்ந்த 3வது இன்பான்ட்ரி பிரிவினர் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நகரில் தேசிய நெடுஞ்சாலை எண் 9ல் அமெரிக்கப் படைகள் அமைத்திருந்தசோதனைச் சாவடிக்கு அருகே வந்த ஒரு டாக்சியை அந்தப் படையினர் தடுத்து நிறுத்தினர்.
அதை ஓட்டி வந்தவரிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டே காரை நெருங்கினர். அப்போது திடீரென அந்தக் கார்வெடித்துச் சிதறியது. இதில் 5 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். காரை ஓட்டி வந்த நபரும் உடல் சிதறிஉயிரிழந்தார். மேலும் பல அமெரிக்க வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தால் இனி கார்களை நினைத்த நேரத்தில் எல்லாம் நிறுத்தி சோதனையிடுவது அமெரிக்கப்படைகளுக்கு மிகவும் சிரமமான செயலாக மாறியுள்ளது.
50 ஈராக்கிய வீரர்கள் பலி:
இதற்கிடையே இந்த நகரில் அமெரிக்கத் தரைப்படையினரை நோக்கி தாக்குதல் நடத்திய ஈராக்கியப் படையினர்மீது அமெரிக்க ஹெலிகாப்டர்கள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தின. இதில் 50 ஈராக்கிய வீரர்கள்கொல்லப்பட்டனர்.
இத் தாக்குதலுக்கு 30 அபாச்சி ரக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. சுமார் 50க்கும் மேற்பட்டஏவுகணைகளும் வீசப்பட்டன.
ரசாயன ஆயுதங்கள் தயார்:
இந் நிலையில் தங்கள் படைகளைத் தாக்க ரசாயன ஆயுதங்களை ஈராக்கிய வீரர்களுக்கு அந் நாட்டு ராணுவத்தலைமை வழங்க ஆரம்பித்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
குறிப்பாக ரிபப்ளிகன் கார்ட்ஸ் படையின் மெதினா பிரிவினரிடம் ரசாயன ஆயுதங்களை அதிபர் சதாம் ஹூசேன்தந்துவிட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது, பாக்தாதை நெருங்கினால் இந்த ஆயுதங்களை ஈராக்கியப் படைகள்தங்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் என அமெரிக்கா கூறுகிறது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications