துருக்கி நாட்டு விமானம் கடத்தல்

Subscribe to Oneindia Tamil

அங்காரா:

ஈராக்குக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் துருக்கி நாட்டின் விமானத்தைநேற்று நள்ளிரவில் கடத்தப்பட்டது,

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்து 205 பயணிகளுடன் இந்த ஏர் பஸ் விமானம் துருக்கி தலைநகர்அங்காராவுக்குச் சென்று கொண்டிருந்தது.

அப்போது விமானியின் காக்பிட்டில் வெடிகுண்டுடன் நுழைந்த இளைஞர் தன்னிடம் இருந்த ஒரு பையைக் காட்டிஅதில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறி மிரட்டினார். பின்னர் விமானத்தை கிரீஸ் நாட்டை நோக்கி செலுத்துமாறுஉத்தரவிட்டார். இதையடுத்து அந்த விமானம் கிரீஸ் தலைநகர் ஏதென்சில் தரையிறங்கியது. இங்கு எரிபொருள்நிரப்பிய பின் விமானத்தை ஜெர்மன் தலைநகர் பெர்லினுக்குக் கொண்டு செல்ல கடத்தல்காரர் உத்தரவிட்டார்.

இந்த விமானம் ஏதென்சில் உள்ள புதிய விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன், விமானத்துக்குள் போலீசார்நுழைந்தால் அதை வெடிக்கச் செய்துவிடுவேன் என கடத்தல்காரர் எச்சரித்தார். இதனால் அந்த விமானத்தைநெடுநேரம் பாதுகாப்புப் படையினர் நெருங்கவில்லை.

பின்னர் அவருடன் விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அந்தவாலிபருடன் துருக்கி பிரதமரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சரணடையுமாறு கேட்டுக் கொண்டார்.இதையடுத்து அவர் சரணடைய ஒப்புக் கொண்டார்.இதன் பின்னர் 205 பயணிகளும் பத்திரமாக தரையிறங்கினர்.

கடத்தல்காரரை கிரீஸ் நாட்டு போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். அந்த வாலிபருக்கும் தீவிரவாதஇயக்கங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிகிறது. தனது வீட்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணாகஜெர்மனியில் உள்ள தனது தந்தையிடம் செல்வதற்காக அவர் இந்தக் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில்தெரியவந்துள்ளது.

முதலில் இவர் குர்து இனப் போராளியாக இருக்கலாம் என அதிகாரிகள் கருதினர். அவரிடம் இருந்த பையைசோதனையிட்டபோது அதில் வெறும் மெழுகுவர்த்திகள் தான் இருந்தன. வெடிகுண்டுகள் ஏதும் இல்லை.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+