தெற்கு மண்டல புதிய ஐ.ஜியாக ராஜேந்திரன் நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதுரையைத் தலைமையகமாகக் கொண்ட தென் மண்டல காவல்துறையின் சட்டம் ஒழுங்கு ஐ.ஜியாகயாகடி.கே.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை இவர் வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்டுள்ளசிறப்பு அதிரடிப்படையின் ஐ.ஜி.யாக இருந்தவர்.தற்போது தென் பிராந்திய சட்டம் ஒழுங்கு ஐ.ஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
அதே போல மதுரை சட்டம் ஒழுங்கு துணைக் கமிஷனராக இருந்து வரும் அபின்தினேஷ் மோதக் சிவகங்கைமாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரையின் சட்டம் ஒழுங்கு துணைக் கமிஷனராக கோபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இவர்கூடுதல் டிஎஸ்.பியாக இருந்து வந்தார் .தற்போது பதவி உயர்வு கொடுக்கப்பட்டு மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் சமீபத்தில் தான் காவல்துறையில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இப்போது மீண்டும் இந்தமாற்றங்கள் நடந்துள்ளன.
-->












Click it and Unblock the Notifications