வைகோவுக்காக சிறை செல்லவும் தயார்: கருணாநிதி அறிவிப்பு
சென்னை:
பொடா சட்டத்தை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும் என கருணாநிதி நேரடியாகவே கோரிக்கைவிடுத்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் விடுதலை கோரி மாநிலம்தழுவிய அனைத்துக் கட்சி உண்ணாவிரதம் இன்று காலை தொடங்கியது. சென்னையில் இந்த உண்ணாவிரதத்தைதொடங்கி வைத்த திமுக தலைவர் கருணாநிதி கூறியதாவது:
பொடா சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தபோது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் அதைஆதரிக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டது.
இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் அதைத் தடுப்போம் என துணைப் பிரதமர் அத்வானி சொன்னதைநம்பினோம். அதை நம்பி நாடாளுமன்றத்தில் இச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தோம். ஆனால், அந்தநம்பிக்கை இப்போது பொய்த்துவிட்டது.
பொடா சட்டத்தை பல மாநில அரசுகளும் தவறாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன. இதை மத்திய அரசால்தடுக்கவும் முடியவிலலை. இதனால் உடனே பொடா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
பொடா சட்டம் கத்தி மாதிரி. அந்தக் கத்தி தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொடா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர் தொடர்ந்து கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுவருகின்றனர்.
எதிர்க் கட்சிகளை மிரட்ட பொடா சட்டத்தை ஜெயலலிதா பயன்படுத்தி வருகிறார். ஆனால், இந்த மிரட்டலுக்குஎல்லாம் பயந்துவிட மாட்டோம். என் தம்பி வைகோவுக்காக சிறை செல்லவும் நான் தயாராக இருக்கிறேன்.
வைகோ மற்றும் பழ.நெடுமாறனின் விடுதலைக்காக எங்களது போராட்டங்கள் தொடரும். அதற்கும் அனைத்துக்கட்சிகளும் ஆதரவு தருவார்கள் என்றார் கருணாநிதி.
பொடா சட்டத்தை தீவிரமாக எதிர்த்து வரும் கருணாநிதி அதை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைவிடுத்திருப்பது இதுவே முதன்முறையாகும்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications