தமிழகத்தில் ஸ்டார் டிவி. சேனல்கள் "கட்"
சென்னை:
தமிழகத்தின்பெரும்பாலான பகுதிகளில் சாட்டிலைட் சானல்களை ஒளிபரப்பிக் கொண்டிருக்கும்சுமங்கலி கேபிள்விஷன் (எஸ்.சி.வி.) நிறுவனத்திற்கும் ஸ்டார் டிவி நிறுவனத்திற்கும் இடையேஏற்பட்டுள்ள பிரச்சினையால் தமிழகம்முழுவதிலும் ஸ்டார் டிவி சானல்கள் ஒளிபரப்புநிறுத்தப்பட்டுள்ளது.
சுமங்கலி கேபிள் விஷன் சன் டிவிக்கு சொந்தமானது. தமிழகம் முழுவதும் கேபிள் டிவிஆபரேட்டர்களுக்கு சுமங்கலி கேபிள் விஷன் தான் சாட்டிலைட் டிவி ஒளிபரப்புகளை வழங்கிவருகிறது.
ஸ்டார் டிவி சானல்கள் சமீபத்தில் பே சானல்களாக மாற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து ஒவ்வொருஇணைப்புக்கும் இவ்வளவு தர வேண்டும் என்று ஸ்டார் டிவி நிறுவனம் கட்டணம் நிர்ணயித்தது.
ஆனால் அதை ஏற்க சுமங்கலி கேபிள் விஷன் மற்றும் பிற கேபிள் டிவி நிறுவனங்கள்மறுத்துவிட்டன. இதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு ஸ்டார் டிவி சேனல்கள் ஒளிபரப்புநிறுத்தப்பட்டது.
பின்னர் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், உடன்பாடு ஏற்பட்டு மீண்டும் ஸ்டார் டிவி சானல்கள்தெரிய ஆரம்பித்தன.
தற்போது மீண்டும் பிரச்சினை எழுந்துள்ளது. சன் டிவியின் சுமங்கலி கேபிள் விஷனுக்கு தனதுசேனல் ஒளிபரப்பைத் தர ஸ்டார் மறுத்துள்ளது. இதுதொடர்பாக ஸ்டார் டிவி தலைமைச் செயல்அதிகாரி சமீர் நாயர் கூறுகையில்,
கடந்த மூன்று மாதங்களாக ஸ்டார் டிவி நிறுவனத்திற்குத் தர வேண்டிய தொகையை எஸ்.சி.வி.நிறுவனம் செலுத்தவில்லை. எனவே அந்த நிறுவனத்துக்கு எங்கள் சேவையை நிறுத்தியுள்ளோம்.மற்ற கேபிள் நிறுவனங்கள் மூலம் ஸ்டார் டிவி சானல்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளனஎன்று கூறியுள்ளார்.
இதன் காரணமாக சென்னை நகரின் 60 சதவீதப் பகுதிகள், மதுரை, கோவை, திருச்சி ஆகியநகரங்களில் ஸ்டார் டிவி சானல்கள் தெரியவில்லை.
கட் செய்யப்பட்டுள்ள சானல்கள் விவரம்:
ஸ்டார் பிளஸ், ஸ்டார் நியூஸ், ஸ்டார் மூவீஸ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் கோல்டு, ஸ்டார் வேர்ல்டு,ஸ்டார் விஜய், சேனல் வி, நேஷனல்ஜியாகிராபிக் ஆகியவை.
பே-சானல்களாக ஸ்டார் டிவி சானல்கள் மாறிய பிறகு கேபிள் டிவியின் மாதாந்திர வாடகைக்கட்டணத்தை கேபிள் டிவி உரிமையாளர்கள் கணிசமாக உயர்த்தினர்.
ரூ.50லிருந்து ரூ.100 வரை கட்டண உயர்வு இருந்தது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்புத்தெரிவித்தனர்.
ஆனால் தற்போது ஸ்டார் டிவி சானல்கள் சுத்தமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில்கடும் கண்டனம் எழுந்துள்ளது. விரைவில் இந்தப் பிரச்சினை சரியாகாவிட்டால் நுகர்வோர்நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் பதிவாகலாம் என்று தெரிகிறது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications