ஈராக்குக்கு சிரியா ஆயுத சப்ளை: அமெரிக்கா எதிர்ப்பு
வாஷிங்டன்:
ஈராக்கியப் படைகளுக்கு சிரியா ஆயுதங்களை வழங்கி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
ஈராக் மீதான தாக்குதலை சிரியா மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறது. அந்த நாடு தொடர்ந்து ஈராக்கை ஆதரித்துவருகிறது.
ஐ.நாவின் தடை காரணமாக ஆயுதங்களை வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது ஈராக். இதனால்அமெரிக்கப் படைகளை அந் நாட்டு ராணுவம் சந்திப்பது கடினம் என்பதால் ஈராக்குக்கு சிரியா ஆயுதங்களைத் தரஆரம்பித்துள்ளது.
போர் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்னதாகவே இந்த ஆயுத சப்ளை ஆரம்பித்துவிட்டதாகத் தெரிகிறது.இப்போதும் கூட இந்த ஆயுத சப்ளை தொடர்வதாகக் கூறப்படுகிறது.
இதை சமீபத்தில் தான் அமெரிக்க ராணுவ உளவுப் பிரிவுகள் கண்டுபிடித்துள்ளன. இதையடுத்து சிரியாவுக்குஅமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈராக்குக்கு ஆயுதங்கள் தருவதும் தங்களுக்கு எதிராக போர்தொடுப்பது ஒன்று தான் என அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் கூறியுள்ளார்.
ஆனால், ஈராக்குக்கு ஆயுதம் எதையும் தரவில்லை என சிரியா மறுத்துள்ளது. அமெரிக்கா தனது தவறுகளைமறைக்கவே இது போன்ற குற்றச்சாட்டைக் கூறியுள்ளதாக சிரியா கூறியுள்ளது. அமெரிக்க வீரர்கள் ஈராக்கில்மண்ணைக் கவ்வ ஆரம்பித்துவிட்டதால் அதைத் திசை திருப்பவே இந்த பொய்ப் பிரச்சாரத்தில் அமெரிக்காஈடுபட்டுள்ளது என சிரியா கூறியுள்ளது.
டாங்குகளுக்கு எதிரான குண்டுகள், எலெக்ட்ரானிக் ஜாமிங் ஆயுதங்கள், இரவு நேரத்தில் தாக்க உதவும் கருவிகள்ஆகியவற்றை ஈராக்குக்கு சிரியா தந்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
ஈரானுக்கு எச்சரிக்கை:
இந் நிலையில் ஈராக்குக்குள் ஈரானிய போராளிக் குழுக்களும் நுழைந்து வருவதாகவும் அதை ஈரான் உடனேதடுக்க வேண்டும் எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications