மதிப்புக் கூட்டு வரி: தமிழகத்திற்கு ரூ. 2400 கோடி நஷ்டம்
சென்னை:
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மதிப்புக் கூட்டு வரி காரணமாக தமிழக அரசுக்கு ரூ. 2400கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று நிதியமைச்சர் பொன்னையன் கூறினார்.
சமீபத்தில் VAT (value added tax) என்ற மதிப்புக் கூட்டு வரியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன்படிபொருள்களை வியாபாரிகள் வாங்கும்போதே அதற்கான வரியையும் மாநில அரசுகள் அவர்களிடம்வசூலித்துவிடும். இதனால் வரி ஏய்ப்பு செய்வதில் இருந்து வியாபாரிகள் தடுக்கப்படுவர்.
ஆனால், இந்த வரி காரணமாக நாட்டில் உணவுப் பொருள்களில் ஆரம்பித்து அன்றாடம் பயன்படுத்தப்படும்அனைத்துப் பொருள்களின் விலைகளும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது திமுக உறுப்பினர் பொன்முடிபேசுகையில், மதிப்பு கூட்டு வரி விதிப்பால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றார்.
அப்போது குறுக்கிட்ட பொன்னையன் உண்மையில் மத்திய அரசின் வலியுறுத்தல் காரணமாகவேமதிப்புக் கூட்டு வரி விதிப்பை தமிழகமும் அமல்படுத்தவுள்ளது. ஆனால் இதனால் மாநில அரசுக்குரூ. 2400 கோடி வருவாய் இழப்பு ஏற்பட உள்ளது.
இதைச் சரிக் கட்டச் சொல்லி மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளோம். அனைத்து மாநிலஅரசுகளும் மதிப்புக் கூட்டு வரி விதிப்பை அமல்படுத்தினால்தான் தமிழக அரசும் அதைக்கடைப்பிடிக்கும்.
ஆனால் யாரும் இந்த வரி விதிப்பை தவிர்க்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள்தான்மதிப்புக் கூட்டு வரியை அமல்படுத்ததுடிக்கிறோம் என்பது போல திமுக உறுப்பினர் பேசுவதுசரியல்ல.
உண்மையில் திமுக தலைவர் கருணாநிதிமுதல்வராக இருந்தபோது டெல்லியில் நடந்த கூட்டத்தில்மதிப்புக் கூட்டு வரி விதிப்பை அமல் செய்வதாக மத்திய அரசிடம் உறுதியளித்தார் என்றார்பொன்னையன்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications