அமெரிக்க ஹெலிகாப்டர், விமானம் வீழ்த்தப்பட்டன?
பாக்தாத்:
அமெரிக்காவின் ஹேரியர் போர் விமானத்தையும் அப்பாச்சி ஹெலிகாப்டரையும் தங்கள் வீரர்கள்சுட்டு வீழ்த்தியுள்ளனர் என்று ஈராக் செய்தி அமைச்சர் முகமது சயீத் சகாப் கூறியுள்ளார்.
போர் தொடர்பாக நிருபர்களிடம் பேசிய சகாப்,
அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டர் ஒன்றை நாங்கள் வீழ்த்தியுள்ளோம். மேலும் ஹேரியர்ரக விமானத்தையும் சுட்டுத் தள்ளியுள்ளோம். அதன் இரண்டு பைலட்டுகளும் கொல்லப்பட்டுவிட்டனர்.
மேலும் அமெரிக்காவின் நான்கு டாங்கிகளை ஈராக் வீரர்கள் தகர்த்துள்ளனர். அவற்றிலிருந்தஅமெரிக்கர்களை எங்கள் வீரர்கள் பிடித்து வைத்துள்ளனர்.
அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள் கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் நடந்துகொள்கின்றனர். பாஸ்ராவுக்கு அருகே கிராமங்களில் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை அழித்துவருகின்றனர். இந்தத் தாக்குதல்களில் மூன்று குழந்தைகள் கூட இறந்துள்னர்.
உம் காசிர் நகருக்கு உதவிப் பொருள்களைக் கொண்டு வந்த இரண்டு கப்பல்களை அவர்கள் வரவிடாமல் தடுத்துள்ளனர்.
மேலும் பஸ்ராவில் உணவுப் பொருள் விநியோகம் செய்யப்படுவதையும் அமெரிக்க, பிரிட்டிஷ்படையினர் தடுத்து வருகின்றனர்.
பணத்தாசை மட்டுமே பிடித்த அவர்களுக்கு மனிதர்கள் துன்பப்படுவது பற்றிக் கவலையே இல்லைபோலும் என்றார் சகாப்.
இதற்கிடையே விமானம், ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்ட செய்திகளை அமெரிக்கா மறுத்துள்ளது.தங்களுடைய விமானமோ, ஹெலிகாப்டரோ, பைலட்டுகளோ காணாமல் போனதாகத் தகவல்கள்இல்லை என்று அது கூறியுள்ளது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications