சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 8 புதிய நீதிபதிகள் நியமனம்
சென்னை:
நீதிபதி அசோக்குமார், நீதிபதி பானுமதி உள்ளிட்ட 8 புதிய நீதிபதிகள் சென்னைஉயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த உயர் நீதிமன்றத்தில் 29 நீதிபதிகள் மட்டுமே இருக்கின்றனர். ஆனால் மொத்த நீதிபதிஇடங்களோ 42. எஞ்சிய இடங்கள் நிரப்பப்படாமலேயே இருந்து வந்தன.
இந்நிலையில் நீதிபதிகள் பதவிக்காக 11 நீதிபதிகள் கொண்ட பட்டியலை மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் அனுப்பி வைத்தது. அவர்களில் எட்டு நீதிபதிகள் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதிகளின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதையடுத்துசென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது.
புதிய நீதிபதிகள் விவரம்:
நீதிபதி ஆர். பானுமதி, நீதிபதி எஸ். அசோக்குமார், நீதிபதி எஸ்.கே. கிருஷ்ணன், நீதிபதி டி.வி.மாசிலாமணி, நீதிபதி எஸ். சர்தார் சக்காரியா ஹூசேன், நீதிபதி எம். தணிகாசலம், நீதிபதி ஏ.ஆர்.ராமலிங்கம் மற்றும் நீதிபதி எஸ்.ஆர். சிங்காரவேலு.
இவர்களில் நீதிபதி பானுமதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் செக்ஸ் சாமியார் பிரேமானந்தசுவாமிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியவர்.
நீதிபதி அசோக்குமாரோ கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திமுக தலைவர் கருணாநிதி கைதுசெய்யப்பட்டபோது அதிமுக அரசைக் கடுமையாக விமர்சித்தவர்.
எட்டு புதிய நீதிபதிகளும் அடுத்த ஓரிரு நாள்களில் பதவி ஏற்பார்கள். சென்னை உயர் நீதிமன்றதலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி அவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications