மதிமுகவை கழற்றி விடும் பா.ஜ.க. அரசு
சென்னை:
பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக்கூட்டத்திற்கு மதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.
தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டிகூட்டணிக் கட்சிகள் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்கானஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடந்தது.
வாஜ்பாய் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்திற்கு மதிமுக மற்றும் பாமகவுக்கு அழைப்புஅனுப்பப்படவில்லை. இது கூட்டணிக் கட்சிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொடா சட்டத்தின் கீழ் மதிமுக பொதுச் செயலாளரான வைகோ கைது செய்யப்பட்டதிலிருந்தேஅவரை மத்திய அரசு கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.
தன்னை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிடம் வைகோ கெஞ்சாவிட்டாலும்,அதுவாகவே நடவடிக்கை எடுக்கும் என்று அவரும் மதிமுகவினரும் நிறைய எதிர்பார்த்தனர்.
ஆனால் வைகோ விடுதலை தொடர்பாக மத்திய அரசு ஒரு படி கூட முன்னெடுத்து வைக்கவில்லை.இதனால் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு மீது வைகோ மிகவும் கடுப்பில் உள்ளார்.
வைகோ பேசியது தீவிரவாதமே- மத்திய அரசு:
இதற்கிடையே விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியது தீவிரவாதத்தை ஆதரிக்கும் செயல்தான்என்று மத்திய அரசு கூறியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த பொடா சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கடந்த சிலநாட்களுக்கு முன் வழக்கு தொடர்ந்தார் வைகோ. பொடா சட்டத்தின் சர்ச்சைக்குரிய 21ம் பிரிவைநீக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
அரசியல் சாசனத்தின் 19ம் பிரிவில் உள்ள பேச்சு சுதந்திரத்தை பொடா சட்டத்தின் 21ம் பிரிவுபாதிக்கிறது என்றும், எனவே தை நீக்க வேண்டும் என்றும் தன் மனுவில் வைகோ கூறியிருந்தார்.
இம்மனு தொடர்பாக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதற்கானபதில் மனுவை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அம்மனுவில்,
பொடா சட்டத்தின் 21ம் பிரிவு பேச்சு சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தாது. சமுதாயத்தின் ஒட்டுமொத்தநலன் கருதித்தான் பொடா சட்டம் இயற்றப்பட்டுள்ளதே தவிர தனி மனிதர்களுக்காக அல்ல.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு இந்தியாவில் புலிகள் அமைப்பு மீதுதடை விதிக்கப்பட்டது.
அவ்வாறு தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்பை ஆதரித்துதான் திருமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியுள்ளார். எனவே அவர் பேசியது தீவிரவாதச் செயல்தான் என்று தன்மனுவில் மத்திய அரசு கூறியுள்ளது.
இதையடுத்து வைகோ தொடர்ந்த வழக்கின் மீதான அடுத்தகட்ட விசாரணை அடுத்த ஒரு சிலநாட்களில் உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதிமுக அதிருப்தி:
மத்திய அரசின் இந்தப் பதில் மனுவால் மதிமுக கடும் அதிருப்தி அடைந்துள்ளது. குறிப்பாக மதிமுகதலைவர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இன்றைய கூட்டத்திலும் தங்களுக்கு அழைப்புவிடுக்கப்படாதது குறித்தும் மதிமுக வேதனை அடைந்துள்ளது.
இதையடுத்து மத்திய அரசின் கூட்டணியில் நீடிப்பதா வேண்டாமா என்பது குறித்து முடிவுசெய்வதற்காக நாளை வேலூர் சிறைக்குச் சென்று வைகோவைச் சந்திக்க உள்ளார் அக்கட்சியின்அவைத் தலைவரான எல். கணேசன்.
வைகோவைச் சந்தித்த கையோடு நாளை மாலையே சென்னை திரும்பி திமுக தலைவர்கருணாநிதியையும் கணேசன் சந்திக்க உள்ளார்.
அதன் பின்னர் இறுதி முடிவை அறிவிப்போம் என்று கணேசன் கூறினார்.
விரைவில் கூட்டணியில் மாற்றங்கள்?
இதற்கிடையே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் தங்களுக்கு அழைப்புவிடுக்கப்படாதது குறித்து பாமகவும் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. அவர்களும் தொடர்ந்துபுலிகளை ஆதரித்து வருவதால்தான் பாமகவுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்றுதெரிகிறது.
வைகோவின் விடுதலை கோரி நேற்றுதான் திமுக, மதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், புதியதமிழகம் ஆகிய கட்சிகள் கலந்து கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந்த உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்த கருணாநிதி, வைகோவுக்காக சிறை செல்லவும் தயாராகஉள்ளேன் என்று கூறினார். இந்த உண்ணாவிரதத்தை பாமக நிறுவனரான ராமதாஸ் முடித்து வைத்தார்என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து மத்திய அரசின் கூட்டணியில் விரைவில் பல மாறுதல்கள்ஏற்படும் என்று தெரிகிறது.
மத்திய அரசு திடீர் பல்டி:
இதற்கிடையே வைகோவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் சில மாறுதல்களைசெய்யப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
"நாங்கள் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் உள்ள சில தவறுகளை உணர்ந்துள்ளோம். அந்தத்தவறுகளைத் திருத்தி மற்றொரு புதிய பதில் மனுவைத் தாக்கல் செய்யவுள்ளோம்.
திருமங்கலத்தில் வைகோ பேசியவற்றில் பொடா சட்டத்தை மீறும் வகையிலான வார்த்தைகள்எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் கூறவுள்ளோம்" என்று மத்திய சட்டத் துறை அமைச்சகஅதிகாரி ஒருவர் கூறினார்.
முன்னதாக, மத்திய அரசு தன் பதில் மனுவில் வைகோ தொடர்பாகக் கூறியுள்ளது தொடர்பாக திமுகஅதிருப்தி அடைந்துள்ளதாக நேற்று நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில்அக்கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சரான டி.ஆர். பாலு கூறியுள்ளார்.
இதன் பின்னர்தான் தங்கள் பதில் மனுவில் மாறுதல்களைச் செய்யவுள்ளதாக மத்திய அரசுஅறிவித்துள்ளது. உடனே அந்தப் பதில் மனுவுக்குப் பதிலாக வேறொரு புதிய பதில் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு அட்டர்னி ஜெனரலுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மதிமுக, திமுகவுக்கு மத்திய அரசின் மீதுள்ள கடுப்பு சிறிது குறையும் என்றுதெரிகிறது.
-->












Click it and Unblock the Notifications