முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. மீது துப்பாக்கிச் சூடு
திண்டுக்கல்:
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. செல்லச்சாமி மீது அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கியால்சுட்டனர். இதில் அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஓட்டன்சத்திரம் அருகே உள்ள அரசப்ப பிள்ளைப்பட்டி கிராமத்தில் ஊராட்சிஇடைத் தேர்தல் நடக்கிறது. இதற்கான தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைக்க அமைச்சர்விஸ்வநாதன் அங்கு வருவதாக இருந்தார்.
இதையொட்டி அதற்கான ஏற்பாடுகளைப் பார்வையிடுவதற்காக செல்லச்சாமி தன் நண்பர்பழனிவேல் என்பவரின் காரில் விரைந்து கொண்டிருந்தார்.
குழந்தை வேலப்பர் கோவில் ரயில்வே கேட் அருகே கார் மெதுவாக சென்றபோது ரயில்வே கேட்பகுதியில் மறைந்திருந்த ஒரு நபர் திடீரென்று செல்லச்சாமி கார் மீது துப்பாக்கியால் சராமாரியாகச்சுட்டார்.
இதில் ஒரு துப்பாக்கிக் குண்டு கண்ணாடியைத் துளைத்துக் கொண்டு பின் சீட்டில் அமர்ந்திருந்தசெல்லச்சாமியின் தோள்பட்டையைத் துளைத்தது. உடனடியாக செல்லச்சாமி ஒட்டன்சத்திரம்கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரை சுட்டது யார் என்று தெரியவில்லை. முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம்நடந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவரை அவர்கள்தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications