பத்திரிக்கைகள் மீதான வழக்குகள் அதிகரிப்பு
சென்னை:
பத்திரிக்கைகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீது வழக்குகள் தொடுப்பது அதிகரித்து வருவதாகமூத்த வழக்கறிஞரான ஸ்ரீராம் பஞ்சு கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த கருத்தரங்கில் அவர் பேசுகையில்,
தகவல் அறியும் உரிமை பொதுமக்களுக்குக் கொடுப்பது மிகவும் முக்கியமான அம்சமாகும். இதன்மூலம் அரசு அதிகாரிகள் அளவில் நடக்கும் ஊழல்களைத் தடுக்க முடியும். நல்லாட்சி நடப்பதற்கும்இது பேருதவி செய்யும்.
ஜனநாயகத்தை நிலை நிறுத்த மக்களின் கண்காணிப்பும் பங்களிப்பும் மிகவும் அவசியம். அரசுஎப்படி செயல்படுகிறது என்பதை அறியும் உரிமை மக்களுக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும்.
பத்திரிக்கைகள் மீதும் பத்திரிக்கையாளர்கள் மீதும் வழக்குகள் போடுவது அதிகரித்து வருகிறது.குறிப்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள்தான் அதிகம் போடப்படுகின்றன.
காரண, காரியங்களுக்காக நீதித் துறையை விமர்சிப்பதை நீதிமன்றங்கள் அனுமதிக்க வேண்டும்என்றார் ஸ்ரீராம் பஞ்சு.
-->












Click it and Unblock the Notifications