கருணாநிதியை "பொடா"வில் கைது செய்ய வேண்டும்: சு. சுவாமி

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்ஆகியோரின் விடுதலை கோரி நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி வைத்த திமுகதலைவர் கருணாநிதியை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.

மதுரையில் இன்று நிருபர்களிடம் சுவாமி பேசுகையில்,

விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதற்காகத்தான் வைகோ, நெடுமாறன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை விடுதலை செய்யக் கோரி திமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழகம் முழுவதும்உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியுள்ளன.

ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் ஸ்விட்சர்லாந்தில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள்தான் இந்தஉண்ணாவிரதப் போராட்டத்திற்கு நிதியுதவி அளித்துள்ளனர். எனக்குக் கிடைத்துள்ள உளவுச்செய்திகள் இதைத் தெரிவித்தள்ளன.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி வைத்த கருணாநிதியையும் பொடா சட்டத்தின்22வது பிரிவின் கீழ் கைது செய்ய வேண்டும்.

புலிகளை ஆதரித்து வைகோ பேசியது தீவிரவாதச் செயல்தான் என்று உச்ச நீதிமன்றத்தில்தெரிவித்துள்ள மத்திய அரசைப் பாராட்டுகிறேன்.

மதுரையில் உயர் நீதிமன்றக் கிளையை அமைப்பதை தமிழக அரசு தாமதப்படுத்தி வருகிறது. இதுகடுமையாகக் கண்டிக்கத்தக்கது. மேலும் இந்தப் புதிய கிளையின் அடிப்படை வசதிகளுக்கானரூ.140 கோடி உதவி மத்திய அரசு உடனடியாக அளிக்க வேண்டும்.

காஷ்மீரில் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய மாநில அரசைக் கலைக்க வேண்டும். இதேகாரணத்திற்காக பிரதமர் வாஜ்பாயும் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

ஈராக் போரை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரலாற்றைப்புரட்டிப் படிக்க வேண்டும். 13 நாடுகளே ஆதரவு கொடுத்த நிலையில் பங்களாதேஷ் போரைஇந்தியா நடத்தியது.

ஆனால் தற்போது ஈராக் போருக்காக அமெரிக்காவுக்கு சில முஸ்லீம் நாடுகள் உள்ளிட்ட 74நாடுகள் ஆதரவு அளித்துள்ளன. இது பயங்கரவாதத்திற்கு எதிரான போர். அதனால் இதில்தவறில்லை என்றார் சுவாமி.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+