தமிழக புது டி.ஜி.பியாக ஐ.கே. கோவிந்த் நியமனம்: ராஜகோபாலன் ஓய்வு
சென்னை:
தமிழக டி.ஜி.பியான ராஜகோபாலன் இன்று ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து புதிய டி.ஜி.பியாக ஐ.கே.கோவிந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக டி.ஜி.பியாக இருந்த நெயில்வால் திடீரென்று மாற்றப்பட்டுஅவருக்குப் பதிலாக ராஜகோபாலன் அப்பதவியில் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் ராஜகோபாலனின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைகிறது. அவர் ஓய்வுபெறுவதைத் தொடர்ந்து புதிய டி.ஜி.பியாக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்தது.
மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளான அலெக்ஸாண்டர், குமாரசாமி அல்லது கோவிந்த் ஆகியோரில்யாராவது புதிய டி.ஜி.பியாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நெயில்வாலேமீண்டும் நியமிக்கப்படலாம் என்றும் காவல் துறை வட்டாரத்தில் கூறப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தின் புதிய டி.ஜி.பியாக கோவிந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரைதமிழ்நாடு காவல் துறை வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக இருந்து வந்தார்.
1969ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற கோவிந்த், குடியரசுத் தலைவர் பதக்கம்உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இன்று பிற்பகல் அவர் தமிழகத்தின் புதிய டி.ஜி.பியாகப் பதவி ஏற்றுக் கொண்டார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications