அரசு டாக்டர்கள் அலட்சியம்: அலைக்கழிக்கப்பட்ட 2 வயது சிறுவன் பரிதாப சாவு
சென்னை:
சென்னையில் சாலை விபத்தில் காயமடைந்த 2 வயது சிறுவன் ஒவ்வொரு அரசுமருத்துவமனையாக அலைக்கழிக்கப்பட்டு இறுதியில் உரிய சிகிச்சை கிடைக்காமல் பரிதாபமாகஉயிரிழந்தான்.
சென்னை அருகே உள்ள கொடுங்கையூர் பகுதியில் உள்ள சின்னப்பூண்டி என்ற இடத்தில் லாரிமோதி கண்ணன் என்ற 2 வயது சிறுவன் படுகாயமடைந்தான். இவ்விபத்தில் அவனது வலது கால்நசுங்கியது.
இதையடுத்து கண்ணனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்குக்கொண்டு வந்தனர். அங்கு உரிய சிகிச்சை தரப்படாமல் கண்ணன் சில மணி நேரம்வைக்கப்பட்டிருந்தான்.
பின்னர் இது மிகவும் சீரியஸான கேஸ். எனவே எழும்பூரில் உள்ள குழந்தைகள் நலமருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள் என்று அங்கிருந்த டாக்டர்கள் கூறி விட்டனர்.
இதையடுத்து அங்கிருந்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அவனைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்தனர் கண்ணனின் பெற்றோர். ஆனால், "இது ரொம்ப ரொம்ப சீரியஸான கேஸ்.எனவே பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள்" என்று அங்கிருந்த டாக்டர்கள் கூறிவிட்டனர்.
இதைத் தொடர்ந்து மீண்டும் பயணம் தொடர்ந்தது. பொது மருத்துவமனையில் கண்ணனின் காலைப்பார்த்த டாக்டர்கள், உடனடியாக அதை அறுவைச் சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்று கூறிவிட்டனர்.
இதைக் கேட்ட கண்ணனின் பெற்றோர் கதறி அழுதனர். சரி பரவாயில்லை, உயிர்தான் முக்கியம்என்று அவர்கள் கூறவே, டாக்டர்கள் அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.
ஆனால் அதற்குள் கண்ணனின் நிலை மிகவும் மோசமடைந்து இறந்தே போனான். விபத்தில் சிக்கியகால் பகுதி சீழ் வைத்து, அது அவனது உயிரையே பறித்து விட்டது.
ஸ்டான்லி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையோ அல்லது ஆரம்ப கட்ட சிகிச்சையோசெய்திருந்தால் குழந்தை பிழைத்திருக்கலாம் என்று பொது மருத்துவமனை டாக்டர்கள்தெரிவித்தனர்.
டாக்டர்களின் அலட்சியத்தால் 2 வயது குழந்தை பரிதாபமாக பலியாகியுள்ளது அவனுடையபெற்றோரையும் உறவினர்களையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அரசு மருத்துவமனைடாக்டர்களின் அலட்சியம் என்றைக்குத்தான் ஓயப் போகிறதோ?
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications