அமெரிக்காவிடம் நியாயம் இல்லை: அத்வானி
டெல்லி:
ஈராக் மீது தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்காவின் பக்கம் எந்த நியாயமும் இல்லை என துணைப் பிரதமர்அத்வானி கூறினார்.
டெல்லி- ஹரியாணா எல்லையில் கிதோர்னி என்ற இடத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அத்வானிஅமெரிக்காவை நேரடியாகக் குறிப்பிடாமல் மறைமுகமாகத் தாக்கினார்.
அவர் கூறியதாவது:
சில நாடுகள் தங்களிடம் நியாயமும், நேர்மையும் இல்லாவிட்டாலும் அதி நவீன ஆயுதங்கள் இருப்பதால் அதைமட்டும் நம்பிக்கொண்டு போருக்குப் போகின்றன. ஏதோ ஒரு வாரம், இரண்டு வாரத்தில் ஒரு நாட்டுராணுவத்தையே வென்று நாட்டைப் பிடித்துவிடலாம் என்று நினைக்கின்றன.
ஆனால், நியாயம் தங்கள் பக்கம் இல்லாததால் போரை அவர்கள் நினைத்த மாதிரி நடத்த முடியவில்லை. போர்எத்தனை நாட்கள் நடக்கும் என்றும் தெரியவில்லை. போரின் முடிவு எப்படி இருக்கப் போகிறது என்றும்தெரியவில்லை.
நவீன ஆயுதங்கள், நல்ல பயிற்சி பெற்ற வீரர்கள் ஆகியவை வெற்றிக்கு முக்கியமானவை தான். ஆனால்,சத்தியமும், தர்மமும் இல்லாவிட்டால் வெற்றி கிடைக்காது. யார் நியாயத்துடன் போரிட்டார்களோ அவர்கள் தான்வென்றார்கள் என்பதை ராமாயணமும் மகாபாரதமும் நமக்கு எடுத்துக் காட்டியுள்ளன.
பாகிஸ்தானுக்கு எதிரான எல்லா போர்களையும் இந்தியா வென்றது. அதற்குக் காரணம் நியாயம் நம் பக்கம்இருந்தது தான். 1962ம் ஆண்டில் சீனா நடத்திய தாக்குதல் தான் நம் பாதுகாப்புத்துறையை வலுவாக்க நம்மைத்தூண்டியது என்றார் அத்வானி.
தனிப்பட்ட முறையில் அத்வானி இவ்வாறு கூறினாலும் அமெரிக்காவைப் பகைத்துக் கொள்ள மத்திய அரசுதயாராக இல்லை. போருக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறிவிட்டு ஒதுங்கிக் கொண்டுவிட்டது இந்தியா.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications