துண்டு துண்டாக வெட்டி கர்ப்பிணி படுகொலை: புதுக்கோட்டை அருகே கொடூரம்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை:

வரதட்சணை தராத காரணத்தால் கர்ப்பிணியாக இருந்த 27 வயதுப் பெண் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார். அவருடைய உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிணற்றில்போடப்பட்டிருந்தன.

புதுக்கோட்டை அருகே உள்ள பொண்டுப் புலி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு. இவர் 7 மாதகர்ப்பிணியாக இருந்தார். இவருக்கும் கணவர் வீட்டாருக்கும் இடையே வரதட்சணை தொடர்பாகபிரச்சினை இருந்து வந்தது.

அதிக வரதட்சணை கொடுக்கவில்லை என்ற காரணத்தைக் காட்டி அடிக்கடி ராமுவை அவர்கள்கொடுமைப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் மிருகத்தனமாக அவர்கள் ராமுவை வெட்டிக் கொன்றனர். பின்னர் அவரது உடலைகை, கால், தலை என தனித் தனியாக வெட்டி அருகில் இருந்த இரண்டு கிணறுகளில் போட்டனர்.

கிணறுகளில் உடல் பாகங்கள் மிதப்பதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல்கொடுத்தனர். இதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தியபோதுதான் அது ராமுவின்உடல்தான் என்று தெரிய வந்தது.

அவரைக் கொலை செய்ததாக மாமியார் கல்யாணி, மாமனார் கருப்பையா மற்றும் அவர்களுடையமகள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமுவின் கணவர் மீது யாரும் சந்தேகம் தெரிவிக்காததால் அவர் கைது செய்யப்படவில்லை.ஆனால் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+