"சார்ஸ்" நோய்: மும்பை விமான நிலையத்தில் உஷார்
மும்பை:
சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளிலும் சுமார் 100 பேர் உயிரைப் பறித்துள்ள "சார்ஸ்" நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து மும்பை விமான நிலையத்தில் அனைத்து விதமானபாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சீனாவில் தோன்றியதாகக் கருதப்படும் இந்தப் புதிய வகை நிமோனியா நோய் லேசாகத்தும்மினாலே எளிதில் பரவக் கூடிய தன்மை வாய்ந்தது.
இந்த நோய் காரணமாக சீனாவில் 50க்கும் மேற்பட்ட மக்களும் சிங்கப்பூர், ஹாங்காங், கனடாஉள்ளிட்ட நாடுகளில் சுமார் 50 பேரும் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து சிங்கப்பூரில்அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கூட இந்த நோய் பரவியுள்ளதாகத் தெரிகிறது.
வைரஸ் மூலம் பரவும் "சார்ஸ்" நோய் இதுவரை இந்தியாவிற்குப் பரவியிருக்கவில்லை. இருந்தாலும்எந்நேரத்திலும் பரவும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக விமானங்களில் வந்துஇறங்கும் பயணிகள் மூலம் "சார்ஸ்" நோய் பரவும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான விமானங்கள் வந்து குவிந்து கொண்டிருக்கும் மும்பைவிமான நிலையத்தில் "சார்ஸ்" நோய் குறித்து உஷார்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து மும்பை விமான நிலையத்தில் வந்து இறங்கும் ஒவ்வொரு பயணியும் தீவிரமருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். "சார்ஸ்" நோய் தாக்கப்பட்ட யாரும்இதுவரை இந்தியாவுக்குள் வரவில்லை என்று மும்பை விமான நிலைய சுகாதாக அதிகாரியானடாக்டர் தாம்பரே தெரிவித்தார்.
"சார்ஸ்" நோய் தாக்கப்பட்ட பயணி யாரும் இங்கு வந்து இறங்கினால் அவர் உடனடியாகப்பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார் என்றும் டாக்டர் தாம்பரே தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications