கல்லூரி மாணவி மீது "ஆசிட்" வீச்சு: காதலனுக்கு போலீஸ் வலை வீச்சு
நாகர்கோவில்:
கல்லூரி வாசல் முன்பாகவே அங்கு படிக்கும் மாணவி மீது திராவகம் வீசப்பட்டது. இதில் அந்தமாணவி படுகாயம் அடைந்தார். அவர் மீது திராவகம் வீசிய காதலனை போலீஸார் தேடிவருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கூட்ட மாவு என்ற இடத்தைச் சேர்ந்தவர்ஜீனாகுமாரி. இவர் காவல் கிணறு பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார்.
இவரும் ஜோன்ஸ் என்ற எல்.ஐ.சி. ஏஜெண்டும் சில காலமாக காதலித்து வந்தனர். ஆனால் இந்தக்காதலுக்கு ஜீனாகுமாரியின் வீட்டினர் சம்மதிக்கவில்லை. ஜோன்ஸை இனிமேல் சந்திக்கக் கூடாது,பேசக் கூடாது என்று அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.
அவரும் ஜோன்ஸை சந்திப்பதை தவிர்த்து வந்தார். இதனால் ஜோன்ஸ் மிகவும் ஆத்திரமடைந்தார்.
கடந்த ஜனவரி 14ம் தேதி பொங்கல் தினத்தன்று ஜோன்ஸும் ஸ்டீபன் என்பவரும் சேர்ந்துஜீனாகுமாரி மீது பிளீச்சிங் பவுடரை தெளித்து விட்டுச் சென்றனர். இதனால் அவர் முகத்தில் லேசானகாயம் ஏற்பட்டது.
ஜோன்ஸினால் பிரச்சினை என்று தெரிந்ததும் ஜீனாகுமாரியின் குடும்பத்தினர் வெள்ளமடம் என்றஇடத்திற்கு வீட்டை மாற்றிச் சென்றனர். அங்கிருந்து பஸ்சில் கல்லூரிக்கு வந்து சென்றார்ஜீனாகுமாரி.
இந்நிலையில் தொடர்ந்து ஜீனாகுமாரி பிடிவாதமாக தன்னுடன் பேச மறுத்து வந்ததால் ஆத்திரத்தின்உச்சிக்குச் சென்றார் ஜோன்ஸ்.
இதையடுத்து நேற்று காலை கல்லூரிக்கு வந்த ஜீனாகுமாரியை கல்லூரி வாசல் அருகே தடுத்துநிறுத்தினார் ஜோன்ஸ். பின்னர் தனது கையில் வைத்திருந்த திராவகத்தை எடுத்து ஜீனாகுமாரியின்முகத்தில் வீசினார்.
இதனால் ஜீனாகுமாரி அலறித் துடித்தார். அவர் அருகே நின்று கொண்டிருந்த லாரா என்றமாணவியின் முகத்திலும் திராவகம் தெறித்தது. இதனால் அவரும் பயங்கரமாக அலறினார்.
அவர்களுடைய அலறல் சத்தத்தைக் கேட்டு வந்த மற்ற மாணவிகளும் ஆசிரியைகளும்இருவரையும் ஒழுகினசேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்குஇருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த முறை பிளீச்சிங் பவுடர் தெளித்தபோதே ஜோன்ஸ் மீது போலீஸார் சரியான நடவடிக்கைஎடுக்கவில்லை. இதனால்தான் திராவகம் வீசும் அளவுக்கு அவர் துணிந்துள்ளார் என்று போலீஸார்மீது ஜீனாகுமாரியின் உறவினர்களும், கல்லூரி மாணவிகளும் புகார் தெரிவித்துள்ளனர்.
ஜோன்ஸை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications