ஈரான் பிரிட்டிஷ் தூதரகம் மீது தற்கொலை தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்:

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள பிரிட்டிஷ் தூதரக காம்பவுண்ட் சுவரை மோதிய ஒரு டிரக்வெடித்துச் சிதறியது. இதில் வேன் டிரைவர் பலியானார்.

நேற்று நள்ளிரவில் டெஹ்ரானில் உள்ள பிரிட்டிஷ் தூதரக காம்பவுண்ட் சுவர் மீது ஒரு டிரக் வந்துமோதியது. மோதிய வேகத்திலேயே அந்த டிரக் வெடித்துச் சிதறியது.

இச்சம்பவத்தில் அந்த டிரக்கின் டிரைவர் உடல் சிதறி உயிரிழந்தார். ஆனால் தூதரகத்தில்இருந்தவர்கள் இதில் காயமடையவில்லை.

அளவுக்கு அதிகமான எரிபொருளை நிரப்பி அந்த டிரைவர் டிரக்கை வெடிக்கச் செய்துள்ளார். இவர்ஈரான் எரிசக்தித் துறையின் டிரைவர் ஆவார்.

ஆனால், இது ஒரு விபத்து தான் என ஈரான் அரசு கூறியுள்ளது. இது அமெரிக்காவுக்கு எதிராக நடத்தப்பட்டதாக்குதல் அல்ல என்று கூறியுள்ளது.

ஈராக் போரைக் கண்டித்து ஈரானில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த மார்ச் 28ம்தேதி கூட டெஹ்ரானில் போரை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட பேரணிநடைபெற்றது.

அப்போது பேரணியில் கலந்து கொண்டவர்கள் பிரிட்டிஷ் தூதரகத்தை தாக்கினர் என்பதுகுறிப்பிடத்தக்கது. இதில் அதன் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின. ஈராக்குடன் 12 ஆண்டுபோர் நடத்திய நாடு ஈரான். ஆனால், அங்கு இப்போது தீவிரமாக ஈராக் ஆதரவு அலை பரவிவருகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+