""காங்கிரசில் இனி கோஷ்டி மோதலே கிடையாது"": சோ.பா.
சென்னை:
காங்கிரஸ் கட்சியில் இனி கோஷ்டி மோதல் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று அக்கட்சியின்தமிழக தலைவர் சோ. பாலகிருஷ்ணன் (சோ.பா.) கூறியுள்ளார்.
காங்கிரசில் ஏற்கனவே மிகுந்துள்ள கோஷ்டி மோதல்களுக்கு சிகரம் வைத்தது போல் கடந்த சிலநாட்களுக்கு முன் சோ.பாவும், தமிழக காங்கிரஸ் செயல் தலைவரான இளங்கோவனும் கடுமையாகமோதிக் கொண்டனர்.
கட்சியின் மாவட்டச் செயலாளர்களை நியமிப்பதில் இருவருக்கும் இடையே பெரும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. எட்டு மாவட்டச் செயலாளர்களை சோ.பா. அதிரடியாக நீக்கினார்.நீக்கப்பட்டவர்கள் அனைவரும் இளங்கோவனின் ஆதரவாளர்கள் என்பதால் அவர்கள்கொந்தளிக்கத் தொடங்கினர்.
இந்த விஷயத்தில் சோ.பா. தலையிடக் கூடாது என்று இளங்கோவனும், இளங்கோவன் தலையிடக்கூடாது என்று சோ.பாவும், இவர்கள் இருவருமே தலையிடக் கூடாது என கட்சியின் ஒழுங்குநடவடிக்கைக் குழுவின் தலைவரான குமரி அனந்தனும் ஒருவரை ஒருவர் குறை கூறினர்.
விவகாரம் காங்கிரஸ் மேலிடத்துக்குச் சென்றது. சோ.பாவையும், இளங்கோவனையும் உடனடியாகடெல்லிக்கு அழைத்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
கடந்த வாரம் டெல்லிக்குச் சென்ற அவர்கள் இருவருடனும் கட்சியின் செயலாளர்களான ஆஸ்கர்பெர்னாண்டஸ், ரமேஷ் சென்னிதாலா உள்ளிட்டவர்கள் சந்தித்துப் பேசி அவர்களுக்கு சமாதானம்செய்து வைத்தனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர்களிடையே இனி எந்தவிதமான மோதலும் ஏற்படக் கூடாது என்றும்அறிவுறுத்தப்பட்டது. இனிமேல் மோதிக் கொள்ள மாட்டோம் என்று சோ.பாவும் இளங்கோவனும்உறுதி அளித்தனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக டெல்லியில் முகாமிட்டிருந்த சோ.பா. இன்று காலை சென்னைவந்து சேர்ந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மேலும் மேலும் வளர நல்ல வாய்ப்புக்கள் உள்ளன. இனிமேல்உட்கட்சிப் பூசலே இருக்காது.
டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் நல்ல முடிவுகளை இளங்கோவனும் நானும் எடுத்துள்ளோம்.அவர் நாளை சென்னை திரும்புகிறார்.
நாளை இருவரும் சேர்ந்து நிருபர்களைச் சந்திப்போம். அப்போது சில பிரம்மாண்டமானஅறிவுப்புகளை வெளியிடுவோம்.
காங்கிரஸ் கட்சிக்குள் இனிமேல் எந்தவிதமான பிரச்சனையும் கிடையாது. அனைத்தையும்டெல்லியில் நாங்கள் இருவரும் "கிளியர்" ஆக்கிக் கொண்டோம் என்றார் சோ.பா.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications