அதிரடிப்படை தலைவர் பதவியை உதறினார் தேவாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக அதிரடிப்படை தலைவர் பதவியிலிருந்து முன்னாள் டி.ஜி.பி. தேவாரம் திடீரென விலகிவிட்டார்.

கடந்த 2001ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தேவாரத்தை அதிரடிப்படை தலைவராகநியமித்தார் முதல்வர் ஜெயலலிதா.

சந்தனக் கடத்தல் வீரப்பனை எப்படியும் பிடித்தே தீருவேன் என்று சபதம் எடுத்துக் கொண்டுகளத்தில் இறங்கினார் தேவாரம்.

ஆனால் இதுவரை வீரப்பனைப் பிடிக்கவே முடியவில்லை. கர்நாடக முன்னாள் அமைச்சர்நாகப்பாவை அவன் கடத்திச் சென்றதும், பின்னர் அவர் மர்மமான முறையில்கொல்லப்பட்டதும்தான் மிச்சம்.

நாகப்பா இறந்த பின்னராவது வீரப்பன் விரைவில் பிடிபடுவான் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அவன் தொடர்ந்து காட்டுக்குள்ளேயே ஒளிந்து கொண்டுள்ளான்.

இந்நிலையில் தேவாரம் திடீரென அதிரடிப்படைத் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

வரும் மே 31ம் தேதி வரை அவருக்குப் பதவிக் காலம் இருந்தது. ஆனால் திடீரென்று தேவாரம்தற்போது அப்பதவியிலிருந்து விலகியுள்ளார். கடந்த ஆண்டு மே 31ம் தேதி அவருக்குப் பணிநீடிப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் நிலை காரணமாகவே தேவாரம் பணியிலிருந்து விலகிக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனாலும் ஜெயலலிதா அவருக்கு வேறொரு பதவியைக் கொடுத்துள்ளது. தமிழக அரசின்விளையாட்டு ஆணையத்தின் துணைத் தலைவராக தேவாரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+