ஈராக்கிய 45வது படை பிரிவுக்கு விருதுகள்: சதாம் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்:

உம் கஸ்ஸர் நகரில் அமெரிக்க- பிரிட்டிஷ் படைகளை எதிர்த்துப் போட்டியிட்ட ஈராக்கிய 45வது பிரிகேட்படைப் பிரிவுக்கு நாட்டின் உயரிய இரு விருதுகளை வழங்குவதாக அதிபர் சதாம் ஹூசேன் அறிவித்துள்ளார்..

ஈராக்கிய சாட்டிலைட் தொலைக்காட்சி இதனை இன்று அறிவித்தது. 1991ம் ஆண்டு நடந்த போரில் இதே படைதான் சிறப்பாக செயல்பட்டது. இதற்காக உம் அல்- மரீக் என்ற விருதையும், இப்போதைய போரில் மிகச்சிறப்பாக போராடியதற்காக விஸாம் அல்-ரிபிதைன் என்ற விருதையும் வழங்குவதாக சதாம் ஹூசேன்அறிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட குவைத்துக்குள் அமைந்துள்ள ஈராக்கிய நகரான உம்-கஸ்ஸரை ஒரே நாளில் பிடித்துவிட்டதாகபிரிட்டன் கூறியது. ஆனால், இன்று வரை அங்கு சண்டை நடந்து வருகிறது. ஈராக்கிய வீரர்கள் தொடர்ந்துபிரிட்டிஷ் படைகளைத் தாக்கி வருகின்றனர்.

அதே போல நசிரியாவில் அமெரிக்க- பிரிட்டிஷ் படைகளை எதிர்த்துப் போரிட்டு உயிர் நீத்த வீரர்களுக்கும்விருதுகளை சதாம் ஹூசேன் அறிவித்துள்ளார்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+