54 அமெரிக்க- பிரிட்டிஷ் வீரர்கள் சாவு: ஈராக்
பாக்தாத்:
கடந்த 48 மணி நேரத்தில் 54 அமெரிக்க- பிரிட்டிஷ் வீரர்களைக் கொன்று குவித்துள்ளதாக ஈராக் கூறியுள்ளது.இவர்களில் பெரும்பாலானவர்கள் பாஸ்ரா நகர் அருகே கொல்லப்பட்டதாக ஈராக்கிய டிவி தெரிவித்தது.
ஈராக்கிய டிவியில் பேசிய ராணுவ செய்தித் தொடர்பாளர், பாஸ்ராவில் பிரிட்டிஷ் படைகளை ஈராக்கியப் படைகள்சுற்றி வளைத்துத் தாக்கின. அதில் பிரிட்டிஷ் வீரர்கள் கொல்லப்பட்டனர். இத் தாக்குதலையடுத்து பிரிட்டிஷ்படைகளைக் காக்க வந்த அமெரிக்கப் படைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அமெரிக்க வீரர்கள்இறந்தனர்.
4 அமெரிக்க அபாச்சி ஹெலிகாப்டர்கள், 2 விமானியில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன என்றார்.
போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 36 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பென்டகன் ஒப்புக்கொண்டுள்ளது.
இதற்கிடையே பாக்தாத், பாபிலோன் உள்ளிட்ட இடங்களில் அமெரிக்க விமானங்கள் நடத்திய தாக்குதலில் சுமார்55 அப்பாவி மக்கள் பலியாகியுள்ளதாக ஈராக்கிய தகவல்துறை அமைச்சர் சைத் அல் சகாப் இன்று பிற்பகலில்தெரிவித்தார்.
இன்று பாஸ்ரா அருகே அல்-ஜீபையர் என்ற இடத்தில் அமெரிக்க சப்ளை வாகன வரிசையை ஈராக்கியப் படைகள்தாக்கி திருப்பி விரட்டின. ஒரு அபாச்சி ஹெலிகாப்டரையும் ஈராக்கியப் படைகள் வீழ்த்தின என்றார். நஜாப்பில் 7அமெரிக்க டாங்கிகளை சதாம் பிதாயீன் போராளிக் குழு அழித்தது.
நசிரியாவை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்கும் அமெரிக்கப் படைகளின் முயற்சி தொடர்ந்து முறியடிக்கப்பட்டுவருகிறது. இன்றும் அங்கு அமெரிக்கப் படைகள் தீவிர தாக்குதலை சந்தித்து வருகின்றனர் என்றார்.
இந் நிலையில் அமெரிக்காவைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஐ.நா. சபைக்கு அரபு நாடுகள்கூட்டமைப்பும், பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
இதற்கிடையே நானோ, எனது குடும்பத்தினரோ நாட்டை விட்டு ஓடவில்லை. ஓடவும் மாட்டோம் எனவும் ஈராக்அதிபர் சதாம் ஹூசேன் அந் நாட்டு ரேடியோவில் தெரிவித்தார். அவர் நாட்டை விட்டு ஓடிவிட்டதாக சிலஅமெரிக்கப் படைகளின் கமாண்டர்கள் கூறியிருந்தனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications