தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி மீண்டும் சூடு
சென்னை:
நீதித் துறையில் உள்ள காலி இடங்களில் அரசு பணியாளர்களை நியமிக்கலாம் என்று தமிழக அரசுகூறியுள்ளதற்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளார்.
நீதித் துறைக்கு நிதி ஒதுக்கப்படாதது குறித்தும், பல நீதிமன்றங்களில் காலி இடங்கள் நிரப்பப்படாததுகுறித்தும் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக அரசைக் கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்தார் நீதிபதிசுபாஷன் ரெட்டி.
இந்நிலையில் நீதித் துறையில் உள்ள காலி இடங்களை நிரப்பக் கோரி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றப் பதிவாளர் கடிதம் எழுதி இருந்தார்.
அந்தக் கடிதத்தையே ரிட் மனுவாக எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்றம் இது தொடர்பான வழக்கின்விசாரணையை நேற்று நடத்தியது. நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி கோவிந்தராஜன்ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இவ்வழக்கை விசாரித்தது.
அப்போது அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாநிலத்தில் தற்போது புதியநியமனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நிதி நிலையைக் கருத்தில் கொண்டும் மேற்கொண்டுநியமனங்களை செய்ய முடியாது.
மேலும் பிற அரசுத் துறைகளில் உள்ள ஊழியர்களை நீதித்துறைக்கு மாற்ற அரசு முயற்சித்துவருகிறது. அதனால் ஊழியர் நியமனத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கத் தேவை இல்லைஎன்று அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.
இவ்வழக்கு விசாரணையின்போது நீதிபதி சுபாஷன் ரெட்டி கூறுகையில்,
அரசுக்கு உள்ள சிக்கல்கள் எங்களுக்குத் தெரியும். ஆனாலும் அரசு ஊழியர்கள் எப்படி, எதற்காகநீதித் துறைக்கு மாற்றப்பட வேண்டும்?
அவர்களை ஏற்றுக் கொள்வதில் பிரச்சனை இல்லை. ஆனால் அவ்வாறு நியமிக்கப்படுபவர்களுக்குசட்டம் குறித்து தெரிய வாய்ப்பில்லை. நீதித் துறைக்கு நியமிக்கப்படுபவர்கள் சில விதிகளின்கீழ்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அவர்கள் எங்கள் தேவைக்கு உகந்தவர்களாக இருக்க வேண்டும். இந்தப் பிரச்சனையை எப்படிச்சமாளிப்பது என்பது ஒரு புறம் இருக்கட்டும். அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை அளித்துகூட நாங்கள் ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால் நீதித் துறை நியமனங்களுக்கு ஏன் தடை விதிக்கப்பட்டது? சட்டசபையில் அதிகாரம்சபாநாயகருக்குத்தான் உள்ளது. அவர் மீது உங்கள் விருப்பத்தைத் திணிக்க முடியுமா?
நீதித் துறை என்பது அரசின் ஒரு அங்கம் கிடையாது. நாங்கள் அரசியல் சாசனப்படிதான்செயல்படுவோம். நியமனம் குறித்துக் கடிதம் எழுதினால் நிராகரிக்கப்பட்ட பதில்தான்அரசிடமிருந்து வருகிறது. நீதித் துறைக்கு அரசு தரும் மரியாதை இவ்வளவுதானா?
நான் இங்கு வரும்போது அரசும் நீதித் துறையும் பரஸ்பரம் ஒன்றை ஒன்று புரிந்து கொண்டுசெயல்பட்டன. ஆனால் தற்போது அப்படி இல்லை என்றார் நீதிபதி சுபாஷன் ரெட்டி.
பின்னர் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் இவ்வழக்கின் தீர்ப்பை தேதிகுறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications