7 பெண்கள், குழந்தைகள் சுட்டுக் கொலை: அமெரிக்க ராணுவம் வெறிச் செயல்
நஜாப்:
பாக்தாதின் தென் மத்திய நகரான நஜாபில் 7 பெண்கள் மற்றும் குழந்தைகைள அமெரிக்க வீரர்கள் அநியாயமாகசுட்டுக் கொன்றனர்.
இந்த நகரின் மீது அமெரிக்கப் படைகள் பயங்கர தாக்குதல் நடத்தி வருவதால் ஆயிரக்கணக்கான மக்கள்கார்களிலும், வேன்களிலும், நடந்தும் ஊரை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த நகரின் உள்ள ஈராக்கியப்படைகள் தீவிர தாக்குதல் நடத்துவதால் நகரின் வெளியே தான் அமெரிக்கப் படைகள் நிற்கின்றன.
நகரின் வெளியே பல இடங்களில் சோதனைச் சாவடிகளை அமெரிக்கப் படையினர் அமைத்துள்ளனர்.அமெரிக்கப் படைகளின் குண்டுவீச்சில் இருந்து தப்பிய 13 அப்பாவி மக்கள் ஒரு காரில் ஊரை விட்டு வெளியேவந்தனர்.
இந்தக் காரை அமெரிக்கப் படையினர் சோதனைச் சாவடி அருகே தடுத்து நிறுத்தினர். ஆனால், தங்களைதேவையில்லாமல் தொந்தரவு செய்வார்கள் என்று கருதிய அந்தக் காரின் டிரைவர் அதை நிறுத்தாமல் சென்றார்.
இதையடுத்து அந்தக் காரின் மீது அமெரிக்கப் படைகள் பல தரப்பில் இருந்தும் துப்பாக்கித் தாக்குதல் நடத்தினர்.இதில் அந்தக் கார் தூள் தூளானது. அதில் இருந்த 7 பெண்களும் குழந்தைகளும் துப்பாக்கிக் குண்டுகளுக்குஅநியாயமாகப் பலியாயினர்.
மேலும் 6 பேர் பலத்த காயமடைந்தனர். அமெரிக்காவின் 3வது இன்பாண்ட்ரி படைகள் நடத்திய தாக்குதல் இது.
இது தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நடத்தப்பட்ட தாக்குதல் என அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications