பாக்தாத் சிதைக்கும் அமெரிக்க குண்டுவீச்சு
பாக்தாத்:
நசிரியாவில் ஈராக்கியப் படைகளுக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையே பலத்த மோதல் நடந்து வருகிறது.இந்த நகரைக் கைப்பற்றினால் தான் பாக்தாதுக்குள் அமெரிக்கப் படைகள் பிரச்சனையின்றி நுழைய முயலும்என்பதால் இஙகு தீவிர மோதல் நடந்து வருகிறது.
அதே நேரத்தில் பாக்தாதில் ஈராக்கியத் துருப்புக்கள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறிக் கொண்டு அந்த நகரைஏவுகணைகளாலும் விமான குண்டு வீச்சுகளாலும் தொடர்ந்து அழித்து வருகிறது அமெரிக்கா. அந்த நகரில்நேற்றிரவில் இருந்து தொடர்ந்து பயங்கர குண்டுவீச்சு நடந்தது.
போர் தொடங்கியதில் இருந்து பாக்தாத் மீது மிக அதிகமான குண்டுகள் வீசப்பட்டது நேற்றிரவு தான் எனஅமெரிக்கா கூறியுள்ளது. ஒரே இலக்கை அடுத்தடுத்து தொடர்ந்து குண்டுகளாலும் ஏவுகணைகளாலும் தாக்கும்புதிய வகைத் தாக்குதலையும் அமெரிக்கா தொடங்கியுள்ளது.
பாக்தாத் மட்டுமின்றி இஸ்லாமியர்களின் புனித நகரான கர்பலாவும் கடும் குண்டுவீச்சுக்கு ஆளாகி வருகிறது.பாக்தாதில் சர்வதேச பத்திரிக்கையாளர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த 18 மாடி ஹோட்டலும் தப்பவில்லை. அதன்அருகிலும் குண்டு வீசப்பட்டது.
சதாமின் மகன் உதய் தலைமை வகித்து வரும் ஒலிம்பிக் கமிட்டி அலுவலகம், சதாமின் பாத் கட்சி அலுவலகம்,சதாமின் மாளிகைகள், உளவுப் பிரிவு அலுவலகங்கள், தொலைத் தொடர்பு அலுவலகங்கள், டெலிபோன் டவர்கள்என முன்பு தாக்குதல் நடத்தப்பட்ட கட்டடங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடந்தது.
இந்த குண்டுவீச்சுகள், ஏவுகணைத் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் தான் காயமடைந்துவருவதாக ஈராக் கூறியுள்ளது.
தொலைத் தொடர்பு டவர்களை தகர்த்த பின்னரும் ஈராக்கிய டிவி தொடர்ந்து மாற்று வழிகளில் செயல்பட்டுவருகிறது. இந்த டிவியில் சதாம் ஹூசேன் தனது கமாண்டர்களுடன் ஆலோசனை நடத்தும் காட்சிகள் அடிக்கடிகாட்டப்படுகின்றன.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications