இலவச மின்சாரம் ரத்து: 3ம் தேதி அனைத்துக் கட்சி பொதுக் கூட்டம்
சென்னை:
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டதைதக் கண்டித்து மாவட்ட, ஒன்றியதலைநகரங்களில் 3ம் தேதி அனைத்துக் கட்சிகள் கலந்து கொள்ளும் கண்டனப் பொதுக் கூட்டங்கள்நடைபெறவுள்ளன.
இலவச மின்சாரத்தை ரத்து செய்ததைக் கண்டித்து திமுக தலைமையிலான அனைத்து எதிர்க்கட்சிகளும் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன.
அதில் ஒரு பகுதியாக 3ம் தேதியன்று மாவட்ட, ஒன்றிய தலைநகரங்களில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
இந்த பொதுக் கூட்டங்களுக்குரிய ஏற்பாடுகளை அனைத்துக் கட்சியினரின் ஒத்துழைப்புடன்செய்யுமாறு திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிக்கையொன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்கள் தமிழ் தேசம் போராட்டம்:
இதற்கிடையே இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டது, மின் கட்டண உயர்வு ஆகியவற்றைக்கண்டித்து மக்கள் தமிழ் தேசம் கட்சியின் சார்பில் வரும் 17ம் தேதி சென்னையில் போராட்டம்நடத்தப் போவதாக அக்கட்சியின் தலைவர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிமுக அமைச்சருமான கண்ணப்பன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
0மின் கட்டண உயர்வை கண்டித்து வரும் 3ம் தேதி அனைத்துக் கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. 23ம் தேதி போராட்டமும் நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில் 17ம் தேதி எனது தலைமையில் சென்னையில் போராட்டம் நடக்கிறது. மே 3ம் தேதிசிவகங்கையில் சமூக நீதிப் பேரவை மாநாடு நடக்கிறது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்கலந்து கொள்கிறார் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் கண்ணப்பன்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications