ஈராக் போரைக் கண்டித்து ராமதாஸ் போராட்டம்
சென்னை:
ஈராக் மீதான அமெரிக்காவின் தாக்குதலைக் கண்டித்து சென்னையில் பாமக நிறுவனர் டாக்டர்ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
சென்னை-சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பாக இந்தப் போராட்டம் நடைபெற்றது.போராட்டத்தின்போது நிருபர்களிடம் ராமதாஸ் பேசுகையில்,
ஈராக்கில் உள்ள எண்ணெய் வளத்தைச் சுரண்டுவதற்காகவே ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) சபையின்ஒப்புதலையும் கூடப் பெறாமல் தாக்குதலை நடத்தியுள்ளது அமெரிக்கா.
அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வரும அமெரிக்கா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதுகுறித்து உலக நாடுகள் சிந்திக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.
இந்தப் போராட்டத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பாமகதொண்டர்கள் கலந்துகொண்டு அமெரிக்காவுக்கு எதிராகவும், போருக்கு எதிராகவும் கோஷங்களைஎழுப்பினர்.
சட்டசபை தீர்மானம்- முஸ்லீம் லீக் வரவேற்பு:
ஈராக்கைத் தாக்கி வரும் அமெரிக்கா, பிரிட்டிஷ் நாடுகளைக் கண்டித்து தமிழக சட்டசபையில்தீர்மானம் நிறைவேற்றியதற்காக முதல்வர் ஜெயலலிதாவை இந்திய தேசிய முஸ்லீம் லீக் கட்சியின்தலைவர் சையத் சத்தார் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
உலக சமுதாயத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், ஐ.நா. சபையின் அனுமதியும்பெறாமல் தன்னிச்சையாக ஈராக் மீது போர் தொடுத்திருக்கும் அமெரிக்காவையும் அதன் கூட்டணிநாடுகளையும் தமிழக சட்டசபை துணிச்சலாகக் கண்டித்துள்ளது.
இதன் மூலம் வரலாற்று சிறப்பு வாய்ந்த பெருமையை சட்டசபை பெற்றுள்ளது.
இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்த ஜெயலலிதாவுக்கு எனது சார்பிலும், எங்கள் கட்சியின்சார்பிலும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார்சையத் சத்தார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications