பாக்தாத், நசிரியா, பாஸ்ரா அருகே பயங்கர சண்டை

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்:

நசிரியாவில் ஈராக்கியப் படைகளுக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையே பலத்த மோதல் நடந்து வருகிறது.இந்த நகரைக் கைப்பற்றினால் தான் பாக்தாதுக்குள் அமெரிக்கப் படைகள் பிரச்சனையின்றி நுழைய முயலும்என்பதால் இஙகு தீவிர மோதல் நடந்து வருகிறது.

இந்த நகரின் அருகே உள்ள சமவான் பகுதியில் அமெரிக்கப் படைகளை ஈராக்கிய ரிபப்ளிகன் படைப் பிரிவினர்தடுத்து நிறுத்தி தாக்கி வருகின்றனர். இதனால் நகருக்குள் நுழைய முடியாமல் பிரிட்டிஷ் படைகள் திணறிவருகின்றன. இதையடுத்து கூடுதல் பிரிட்டிஷ் படைகள் இந்தப் பகுதிக்கு விரைந்துள்ளன.

நசிரியாவில் ரெட்கிராஸ் ஆம்புலன்சில் பதுங்கி வந்த ஈராக்கியப் படையினர் அமெரிக்கப் படைகளைத் தாக்கின.இதில் பல அமெரிக்க வீரர்கள் படுகாயமடைந்தனர்.

அதே போல் பாஸ்ரா நகரை இன்னும் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியாமல் பிரிட்டிஷ் படைகள்திணறுகின்றன. இங்கு 8வது நாளாக இரு தரப்பினருக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது.

நசிரியாவைப் போலவே, பாஸ்ராவையும் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் தான் குவைத்தில் இருந்துபாக்தாத் வரையிலான உணவு, எரிபொருள், ஆயுத சப்ளையை அமெரிக்கப் படைகளால் பராமரிக்க முடியும்.

இதனால் தான் ஈராக்கியப் படைகள் தொடர்ந்து கடும் எதிர்த் தாக்குதல் நடத்தி வருகின்றன. பாஸ்ராவின் அருகேஅபு அல் கசீப் என்ற பகுதியில் பிரிட்டிஷ் படைகளை பல முனைகளில் இருந்தும் ஈராக்கியப் படைகள்தாக்குகின்றன.

சுமார் 600 டாங்குகளுடன் பிரிட்டிஷ் படைகள் ஈராக்கியப் படைகளை சந்தித்து வருகின்றன. ஈராக்கியப்படையினர் சிறிய குழுக்களாக வந்து மோதுகின்றன.

அதே நேரத்தில் ஏற்கனவே பாக்தாதின் அருகே சென்று விட்ட அமெரிக்காவின் 3வது இன்பான்ட்ரிப் படைகள்அங்கும் கடும் ஈராக்கிய எதிர் தாக்குதலை சந்தித்து வருகின்றன.

இப்போது பாக்தாதுக்கு 80 கி.மீ. தொலைவில் இந்தப் படைகள் உள்ளன. யூப்ரிடிஸ் நதிக் கரையின் ஹிந்தியாநகரில் அதிபர் சதாம் ஹூசேனின் ரிபப்ளிகன் படைகள் நேரடியாகக் களத்தில் இறங்கியுள்ளதால் அமெரிக்கப்படைகள் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகின்றன.

பாக்தாதில் ஈராக்கியத் துருப்புக்கள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறிக் கொண்டு அந்த நகரை ஏவுகணைகளாலும்விமான குண்டு வீச்சுகளாலும் தொடர்ந்து அழித்து வருகிறது அமெரிக்கா. அந்த நகரில் நேற்றிரவில் இருந்துதொடர்ந்து பயங்கர குண்டுவீச்சு நடந்தது.

போர் தொடங்கியதில் இருந்து பாக்தாத் மீது மிக அதிகமான குண்டுகள் வீசப்பட்டது நேற்றிரவு தான் எனஅமெரிக்கா கூறியுள்ளது. ஒரே இலக்கை அடுத்தடுத்து தொடர்ந்து குண்டுகளாலும் ஏவுகணைகளாலும் தாக்கும்புதிய வகைத் தாக்குதலையும் அமெரிக்கா தொடங்கியுள்ளது.

பாக்தாதில் சர்வதேச பத்திரிக்கையாளர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த 18 மாடி ஹோட்டலும் தப்பவில்லை. அதன்அருகிலும் குண்டு வீசப்பட்டது.

சதாமின் மகன் உதய் தலைமை வகித்து வரும் ஒலிம்பிக் கமிட்டி அலுவலகம், சதாமின் பாத் கட்சி அலுவலகம்,சதாமின் மாளிகைகள், உளவுப் பிரிவு அலுவலகங்கள், தொலைத் தொடர்பு அலுவலகங்கள், டெலிபோன் டவர்கள்என முன்பு தாக்குதல் நடத்தப்பட்ட கட்டடங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடந்தது.

ரிபப்ளிகன் படைகளைக் குறி வைத்து அமெரிக்க விமானங்கள் கடும் குண்டு வீச்சும் நடத்தி வருகின்றன.ரிபப்ளிகன் படைகளின் கட்டுப்பாட்டு அறைகள், தகவல் தொடர்பு மையங்கள் இந்த குண்டு வீச்சுக்கு இறையாகிவருகின்றன.

இந்த குண்டுவீச்சுகளில் 11 குழந்தைகள் உள்பட 20 பேர் பலியாகியுள்ளனர்,

அதே போல இஸ்லாமியர்களின் புனித நகரான கர்பலாவும் கடும் குண்டுவீச்சுக்கு ஆளாகி வருகிறது.

நஜாப் நகரில் 101வது அமெரிக்க ஏர்பார்ன் டிவிசன் படைகளுக்கும் ஈராக்கியப் படைகளுக்கும் இடையே பலத்தசண்டை நடந்து வருகிறது. இங்கு ஈராக்கிய ராணுவத்துக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் 8அமெரிக்க ஹெலிகாப்டர்களையும் ஈராக்கிய வீரர்கள் விமான எதிர்ப்பு பீரங்கிகளால் தாக்கி சேதப்படுத்தினர். 3ஹெலிகாப்டர்கள் வீழ்த்தப்பட்டதாகவும் தெரிகிறது.

இதற்கிடையே, இதுவரை 8,000 ஈராக்கிய வீரர்களை நாட்டின் பல இடங்களிலும் அமெரிக்க- பிரிட்டிஷ் படைகள்சிறை பிடித்துள்ளதாக பிரிட்டிஷ் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெப் ஹூன் கூறியுள்ளார்.

ஒவ்வொரு தினம் கடக்கும்போதும் வெற்றி எஙகளை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என அமெரிக்க அதிபர்ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார்.

இந் நிலையில், ஈராக் முழுவதும் தொலைத் தொடர்பு டவர்களை அமெரிக்க விமானங்கள் தகர்த்த பின்னரும்ஈராக்கிய டிவி தொடர்ந்து மாற்று வழிகளில் செயல்பட்டு வருகிறது. இந்த டிவியில் சதாம் ஹூசேன் தனதுகமாண்டர்களுடன் ஆலோசனை நடத்தும் காட்சிகள் அடிக்கடி காட்டப்படுகின்றன.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+