வீரப்பன் கும்பலுடன் அதிரடிப்படையினர் கடும் துப்பாக்கிச் சண்டை
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் காட்டுப் பகுதியில் வீரப்பனுக்கு உணவு எடுத்துச் சென்றவர்களுக்கும்அதிரடிப்படை வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. அவர்களில் சிலரைபிடித்துள்ளதாகவும் அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பன் தற்போது மேட்டுப்பாளையம் காட்டுக்குள் பதுங்கியிருப்பதாகக்கூறப்படுகிறது. இதையடுத்து மேட்டுப்பாளையம், பகாசுரன் மலை, நெல்லித் துறை, உள்ளியூர்ஆகிய காட்டுப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான அதிரடிப் படை வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல்வேட்டை நடந்து வருகிறது.
இந்நிலையில் உள்ளியூர் வனப் பகுதியில் நேற்று வீரப்பன் கும்பலுக்கு சிலர் உணவு எடுத்துச்செல்வதைப் பார்த்த அதிரடிப்படையினர் அவர்களைத் தடுக்க முயன்றனர்.
ஆனால் அந்தக் கும்பல் திடீரென்று அதிரடிப்படையினரை நோக்கித் துப்பாக்கியால் சுடஆரம்பித்தது. உடனே அதிரடிப்படையினரும் பதிலுக்கு அவர்களை நோக்கித் துப்பாக்கியால்சுட்டனர்.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே சிறிது நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் சிலர்பிடிபட்டனர். மேலும் பலர் தப்பி ஓடிவிட்டனர்.
பிடிபட்டவர்களிடம் அதிரடிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம்கிடைத்த தகவலின்படி வீரப்பன் மேட்டுப்பாளையம் வனப் பகுதியில்தான் பதுங்கியுள்ளதாகத்தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து உள்ளியூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட காட்டுப் பகுதிகளில்அதிரடிப்படையினர் தங்களுடைய தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications