பவானியில் அணை கட்ட கேரளாவுக்கு காவிரி நடுவர் மன்றம் தடை
டெல்லி:
பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரள அரசுக்கு காவிரி நடுவர் மன்றம் தடைவிதித்துள்ளது.
தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பவானி ஆறு கேரள மாநிலம் வழியாகப்பாய்ந்து பின்னர் மீண்டும் தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்திற்கே வருகிறது.
இந்நிலையில் கேரள மாநிலம் முக்காலி என்ற இடத்தில் பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசுஅணை கட்டத் தொடங்கியது.
இதற்குத் தமிழக அரசும், எதிர்க் கட்சிகளும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறுபோராட்டங்களும் நடத்தப்பட்டன. மேலும் அணை கட்டும் இடத்தைப் பார்வையிடச் சென்ற தமிழகவிவசாயிகளையும், பத்திரிக்கை நிருபர்களையும் ரவுடிகளுடன் சேர்ந்து கொண்டு கேரள போலீசார்தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பவானியின் குறுக்கே அணை கட்டக் கூடாது என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறைஅமைச்சகம் கேரள அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால் கேரள அரசு யாரைப் பற்றியும் கவலைப்படாமல் பவானியின் குறுக்கே அணை கட்டும்பணியைத் தொடங்கியது. அங்கு இன்னும் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான்உள்ளன.
இதற்கிடையே பவானியின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதைத் தடை செய்ய வேண்டும்என்று கோரி காவிரி நடுவர் மன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.
இது தொடர்பாக இரு தரப்பினரிடமும் நடுவர் மன்றம் விசாரணை நடத்தியது. இந்நிலையில் நேற்றுமீண்டும் இது தொடர்பான வழக்கு விசாரணை காவிரி நடுவர் மன்றத்தில் நடந்தது.
அப்போது பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரள அரசுக்குத் தடை விதித்து நடுவர் மன்றம்உத்தரவிட்டது. இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை பவானியின் குறுக்கேஎந்தவிதமான அணை கட்டுமானப் பணியும் நடைபெறக் கூடாது என்று நடுவர் மன்றம்கூறிவிட்டது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications