மதுரை: சேற்றில் மூழ்கி வாலிபர் பலி
மதுரை:
மதுரை வைகை ஆற்றுப் படுகையில் தோண்டப்பட்டிருந்த கிணற்றில் தவறி விழுந்த 17 வயதுவாலிபர் அதிலிருந்த சேற்று நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை செல்லூர் பகுதியில் வைகை ஆற்றின் அருகே தண்ணீருக்காக சாலைப் பணியாளர்கள் கிணறுதோண்டி வைத்துள்ளனர். இந்தக் கிணற்றில் சேறும் சகதியும் கலந்த தண்ணீர்தான் உள்ளது.
இந்நிலையில் இன்று காலை அவ்வழியாக 2 வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களில்ஒருவர் மட்டும் அந்தக் கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார்.
கிணற்றுக்குள் விழுந்த அவர் சேற்றுக்குள் சிக்கித் தவித்தார். மேலே இருந்த அவர் நண்பர் போட்டஅலறலில் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து கிணற்றுக்குள் விழுந்த வாலிபரை மீட்க முயற்சித்தனர்.
ஆனால் அவர் சேற்றுக்குள் மூழ்கி விட்டார். இதற்குள் தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் சென்றது.அவர்கள் விரைந்து வந்து அந்த வாலிபரை மீட்க முயற்சித்தனர். ஆனால் அவருடைய பிணத்தைமட்டுமே மீட்க முடிந்தது.
செல்லூர் மற்றும் ஆரப்பாளையம் பகுதிகளில் இதுபோன்ற ஏராளமான பள்ளங்கள்தோண்டப்பட்டுள்ளதாகப் புகார் கூறிய அப்பகுதி மக்கள், இவற்றில் மூழ்கி இதுவரை 5 பேர்உயிரிழந்துள்ளதாகவும் கூறினர்.
இதுபோன்ற கிணறுகளில் தேவைப்படும் தண்ணீரை எடுத்துக் கொண்டு உடனடியாக அதை மூடிவிடஉத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications