வெள்ளையன் விடுதலை கோரி நாளை முதல் வணிகர்கள் தொடர் உண்ணாவிரதம்
சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையனை விடுதலை செய்யக் கோரிநாளை முதல் தமிழகம் முழுவதிலும் தொடர் உண்ணாவிரதம் இருக்க வணிகர்கள் முடிவுசெய்துள்ளனர்.
மதிப்புக் கூட்டு வரி விதிப்பைக் கண்டித்து வியாபாரிகள் நடத்திய கடையடைப்புபோராட்டத்தின்போது அடியாட்களுடன் சென்று வியாபாரிகளை மிரட்டி கடைகளை மூடச்சொன்னதாக வெள்ளையன் கைது செய்யப்பட்டார்.
இதைக் கண்டித்து மூன்றாவது நாளாக நேற்றும் தமிழகம் முழுவதும் பல இடங்களில் கடையடைப்புநடந்தது.
இந்நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக நேற்று மாலைவணிகர் சங்கங்களின் பேரவை கூடியது.
வெள்ளையனை உடனடியாக விடுதலை செய்து, அவர் மீது தொடரப்பட்டுள்ள பொய் வழக்குகளைவாபஸ் பெற வேண்டும் என்று கோரி நாளை முதல் தொடர் உண்ணாவிரதம் நடத்துவது என்றுஅந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நாளை காலை தமிழகம் முழுவதும் வணிகர் சங்கங்களின் பேரவை உறுப்பினர்கள் தொடர்உண்ணாவிரதத்தைத் தொடங்க உள்ளனர்.
கடையடைப்பு தொடர்கிறது:
இந்நிலையில் வெள்ளையன் கைதைக் கண்டித்து 2வது நாளாக இன்றும் ஓரிரு இடங்களில்கடையடைப்பு போராட்டம் தொடர்ந்தது.
சென்னையில் அம்பத்தூர், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர் பகுதிகளில் பெரும்பாலான கடைகள்அடைக்கப்பட்டிருந்தன. வணிகர்கள் அனைவரும் கறுப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.
அதேபோல் திருச்சி, திண்டுக்கல், பழனி, திருநெல்வேலி ஆகிய ஊர்களிலும் ஓரளவு கடைகள்அடைக்கப்பட்டிருந்தன.
சட்டசபையில் மார்க்சிஸ்ட் வெளிநடப்பு:
இதற்கிடையே வெள்ளையன் கைது தொடர்பாக தமிழக சட்டசபையில் இன்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
வெள்ளையன் கைதைக் கண்டித்து ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் எனமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏவான நன்மாறன் கோரிக்கை விடுத்தார்.
ஆனால் சபாநாயகர் காளிமுத்து அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார். இது தொடர்பாக 2நாள் கழித்துப் பேசிக் கொள்ளலாம் என்றும் காளிமுத்து கூறிவிட்டார்.
இதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்புசெய்தனர். "2 நாள் கழித்து இந்தப் பிரச்சனை குறித்துப் பேசலாம் என்றால், வெள்ளையனைத்தொடர்ந்து சிறையில் வைத்திருப்பதை தமிழக அரசு நியாயப்படுத்துகிறதா?" என்று சபையிலிருந்துவெளியே வந்த நன்மாறன் கோபத்துடன் கேட்டார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications