மதுரை டூ நெல்லை: சித்தி கொடுமை தாங்காமல் ஓடி வந்த சிறுமி
திருநெல்வேலி:
மதுரையில் சித்தியின் கொடுமை தாங்காமல் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி அதன் பிறகுவிபச்சார புரோக்கர்களின் கையில் சிக்கி, அவர்களிடமிருந்து மீண்டு திருநெல்வேலியில் ஒருஆதரவற்றோர் இல்லத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் சுபா. மாரியப்பன் தன் முதல் மனைவியைவிட்டுவிட்டு இன்னொரு பெண்ணுடன் குடித்தனம் நடத்த ஆரம்பித்தார். தன்னுடனேயே 14வயதான சுபாவையும் வைத்துக் கொண்டார்.
மாரியப்பனின் இரண்டாவது மனைவி, சுபாவை வேலைக்காரி போல நடத்தி வந்தார். பலவிதகொடுமைகளையும் செய்தார். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சுபா வீட்டை விட்டுவெளியேறினார்.
மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றித் திரிந்த சுபா,விபச்சாரக் கும்பல் ஒன்றின் கண்ணில் சிக்கினார். அவர்கள் சுபாவை ஏமாற்றி அழைத்துச் சென்றுவிபச்சாரத்தில் ஈடுபடுத்தினர்.
அவர்களின் பிடியிலிருந்து ஒரு வழியாகத் தப்பிய சுபா, டவுன் ஹால் ரோட்டில் உள்ள ரோசரிசர்ச்சை அணுகினார். அங்கிருந்த பாதிரியாரிடம் தனது சோகக் கதையைக் கூறினார்.
அப்போது விபச்சாரக் கும்பலைச் சேர்ந்த ஒரு பெண் தனது ஆட்களுடன் அங்கு வந்தார். சுபாதன்னிடமிருந்த ரூ.800 பணத்தைத் திருடிக் கொண்டு ஓடி வந்து விட்டதாகக் கூறி அவரைத்தங்களிடம் ஒப்படைக்குமாறு அப்பெண் கேட்கவே பாதிரியாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.இதனால் மீண்டும் விபச்சாரக் கும்பலின் கையில் சிக்கினார் சுபா.
இந்நிலையில் தனக்குக் கிடைத்த மற்றொரு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தப்பினார் சுபா.இம்முறை திருநெல்வேலி செல்லும் ரயிலில் அவர் ஏறிக் கொண்டார். டிக்கெட் எடுக்காததால்திருநெல்வேலி காவல் நிலையத்தில் சுபாவை ஒப்படைத்தார் டிக்கெட் பரிசோதகர்.
பின்னர் காவல் நிலையத்தில் தனது சோகக் கதையை கூறினார் சுபா. அதைக் கேட்ட போலீஸார்திருநெல்வேலியில் உள்ள "சரணாலயம்" என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் சுபாவை ஒப்படைத்தனர்.
ரயிலில் வாலிபர் பிணம்:
இதற்கிடையே திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் 18 வயதுமதிப்புள்ள வாலிபரின் பிணம் கண்டெடுக்கப்பட்டது.
திருவனந்தபுரத்திலிருந்து சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் விருதுநகருக்கு வந்துசேர்ந்தது. அப்போது அந்த ரயிலின் பொதுப் பெட்டியில் 18 வயது வாலிபர் ஒருவர் பிணமாகக்கிடப்பதை மற்ற பயணிகள் பார்த்தனர்.
வாலிபரின் பிணம் உடனடியாக பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அந்த நபர் யார்,எங்கு ஏறினார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதனால் அந்த ரயில் சற்று நேரம் தாமதமாகவே சென்னைக்குக் கிளம்பிச் சென்றது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications