உயர் நீதிமன்றத்தில் 8 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு
சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 8 நீதிபதிகள் இன்று காலை பதவிஏற்றுக் கொண்டனர்.
உயர் நீதிமன்றத்தில் மொத்தமுள்ள 42 இடங்களில் 13 இடங்கள் கடந்த சில மாதங்களாககாலியாகவே கிடந்தன.
இந்நிலையில் கடந்த வாரம் 8 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து இன்று காலைஇந்தப் புதிய நீதிபதிகள் பதவி ஏற்றுக் கொண்டனர்.
நீதிபதி பானுமதி, நீதிபதி அசோக் குமார், நீதிபதி கிருஷ்ணன், நீதிபதி மாசிலாமணி, நீதிபதிராமலிங்கம், நீதிபதி சர்தார் சக்காரியா ஹூசேன், நீதிபதி தணிகாசலம் மற்றும் நீதிபதி சிங்காரவேலுஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி பதவிப் பிரமாணம்செய்து வைத்தார்.
பதவியேற்புக்குப் பின்னர் புதிய நீதிபதிகள் அனைவரும் நன்றி தெரிவித்துப் பேசினர். அப்போதுநீதிபதி பானுமதி பேசுகையில், "என் தந்தை விபத்தில் இறந்தபோது நஷ்ட ஈடு கேட்டு என் தாய்வழக்கு தொடர்ந்தார். ஆனால் பலமுறை அலைந்து திரிந்ததுதான் மிச்சம். பலன் கிடைக்கவேஇல்லை. அவ்வழக்கு நடந்த சேலம் நீதிமன்றத்திலேயே பின்னர் நானும் நீதிபதியாகநியமிக்கப்பட்டேன்" என்றார்.
உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த எளிய பதவியேற்பு விழாவில் நீதிபதிகள்,வழக்கறிஞர்கள் மற்றும் புதிதாகப் பதவியேற்ற நீதிபதிகளின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புதிய நீதிபதிகள் பதவியேற்றுள்ளதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின்எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 5 இடங்கள் காலியாகவே உள்ளன.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications