தீவிரவாதி ராஜாராமன் மர்ம சாவு: சி.பி.ஐ. விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை:
தமிழ் தீவிரவாதி ராஜாராமன் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 8 வழக்கறிஞர்கள்மனு தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த வாரம் சைதாப்பேட்டை நீதிமன்றத்திலிருந்து சென்னை மத்திய சிறைக்கு ராஜாராமன்கொண்டு செல்லப்பட்டபோது அவரைத் தப்புவிக்க மற்ற தீவிரவாதிகள் முயற்சித்தனர்.
அப்போது போலீசாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில்ராஜாராமனும், சரவணன் என்ற மற்றொரு தீவிரவாதியும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆனால் போலீசார்தான் வேண்டுமென்றே ராஜாராமனைச் சுட்டுக் கொன்று விட்டு தப்ப முயற்சி,துப்பாக்கிச் சண்டை என்று நாடகம் ஆடுவதாக சில மனித உரிமை ஆர்வலர்களும்,வழக்கறிஞர்களும் போலீசார் மீது குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் 8 வழக்கறிஞர்கள் இன்று காலை மனு தாக்கல் செய்தனர். அம்மனுவில்,
ராஜாராமன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் போலீசார் கூறும் காரணங்கள் கொஞ்சம் கூடநம்பும்படியாக இல்லை.
சம்பவம் நடந்த கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த மக்களிடம் நாங்கள் விசாரித்ததில் துப்பாக்கிச்சண்டை எதுவும் அங்கு அப்போது நடக்கவே இல்லை என்று தெரிவித்தனர்.
எனவே இந்தச் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த விசாரணையில்தமிழகப் போலீசார் தலையிடக் கூடாது என்று அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜாராமன் கொல்லப்பட்ட சம்பவத்தில் வழக்கறிஞர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம்எங்களால் பதில் அளித்துக் கொண்டிருக்க முடியாது என்று 2 நாட்களுக்கு முன்புதான் சென்னைமாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமார் கூறியிருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications