"சார்ஸ்" நோய்: இந்தியா முழுவதும் உஷார்
அகமதாபாத்:
உலகையே அச்சுறுத்தி வரும் "சார்ஸ்" நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் கூட இந்தியாவுக்குள் வந்துவிடக் கூடாது என்பதற்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் இதுவரை 78 பேர் "சார்ஸ்" நோய் காரணமாக இறந்துள்ளனர். சீனாவில் மட்டும்46 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில்தான் இந்த நோய் தோன்றியதாகக் கருதப்படுகிறது.
சீனா தவிர சிங்கப்பூர், ஹாங்காங், கனடா உள்ளிட்ட நாடுகளிலும் "சார்ஸ்" நோயால் தாக்கப்பட்டுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
"சார்ஸ்" நோயாளிகள் சாதாரணமாக இருமினாலே போதும், அந்நோய் மற்றவர்களை எளிதாகத்தொற்றி விடும். இதையடுத்து உலகெங்கிலும் இந்த நோய் பரவாமல் தடுப்பதற்கானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்தியாவிலும் "சார்ஸ்" நோயாளிகள் யாரும் ஊடுருவி விடக் கூடாது என்பதில்மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக உள்ளன. வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்துவிமானங்கள் மற்றும் கப்பல்களில் உள்ள பயணிகள் தீவிர மருத்துவப் பரிசோதனைக்குஉட்படுத்தப்படுகின்றனர்.
இதைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள்உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. "சார்ஸ்" நோய் உள்ளதா என்பதைப் பரிசோதிக்கும்மருத்துவக் குழுக்களும் 24 மணி நேரமும் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றனர்.
சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், இந்தோனேஷியா, வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து வரும்விமானங்கள் மற்றும் கப்பல்களில் வரும் பயணிகள் குறிப்பாகப் பரிசோதனைக்கு உள்ளாகின்றனர்.
இதுவரை நடைபெற்ற பரிசோதனைகளில் எந்தப் பயணியும் "சார்ஸ்" நோயால்பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications