பாக்தாத் விமான நிலைய ரன்வேயை பிடித்தது அமெரிக்கா: சதாம் பெயர் நீக்கம்

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்:

பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தைப் பிடிக்க இன்று காலை முதல் பயங்கர சண்டை நடந்து வருகிறது. விமான நிலையத்தின்ஒரு ரன்வேயை அமெரிக்கப் படைகள் பிடித்துள்ளன. அமெரிக்கப் படைகளின் 5 டாங்குகளை ஈராக்கியப் படைகள்கைப்பற்றியுள்ளன.

Iraqi soldiers near Tarmac of Baghdad airportஆனால், விமான நிலையத்தை முழுமையாகப் பிடித்துவிட்டதாகவும் அந்த விமான நிலையத்தின் பெயர் பாக்தாத் சர்வதேசவிமான நிலையம் என்று மாற்றப்படுவதாகவும் அமெரிக்கப் படைகள் கூறியுள்ளன.

நேற்றிரவே இந்த விமான நிலையத்தின் பெரும்பாலான பகுதிகளைப் பிடித்துவிட்டதாக முன்னதாக அமெரிக்கப் படைகள் கூறின.ஆனால், இது உண்மையல்ல என பாக்தாதில் உள்ள பி.பி.சி. செய்தியாளர் ஆண்ட்ரூ கில்லிகன் உறுதி செய்தார். அங்கு தொடர்ந்துசண்டை நடந்து வருகிறது.

பாக்தாதை நோக்கி முன்னேறி வரும் அமெரிக்கப் படைகள் நேற்று மாலையில் சதாம் சர்வதேச விமான நிலையத்தை நெருங்கின.இன்று காலை 8.30 மணியளவில் விமான நிலையத்தைப் பிடிக்க மோதல் தொடங்கியது. தொடர்ந்து அங்கு கடும் மோதல் நடந்துவருகிறது.

விமான நிலையத்தின் ஒரு ரன்வேயுைம் மேலும் சில பகுதிகளையும் அமெரிக்கப் படைகள் பிடித்துள்ளன. 300 ஈராக்கிய வீரர்கள்வரை கொல்லப்பட்டதாகவும் அமெரிக்கா கூறுகிறது. அதே நேரத்தில் அமெரிக்காவின் 5 டாங்குகளைப் பிடித்துள்ளதாகவும்,மேலும் பல டாங்குகளை சிதறடித்துள்ளதாகவும் ஈராக் கூறியுள்ளது.

முன்னதாக விமான நிலையத்தை நேற்று நள்ளிரவே கைப்பற்றிவிட்டதாக அமெரிக்கா கூறியது பொய் என்பதுஅம்பலமாகிவிட்டது. நகரின் மையத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள இந்த விமான நிலையத்தில் எதிர்பார்த்ததுபோல ஈராக்கியப் படைகளில் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பவில்லை என்றும் சாதாரண துப்பாக்கிகள் கொண்ட ஈராக்கியப்படைகள் தான் எதிர்த்துப் போராடின எனவும் பென்டகன் கூறியது.

இந்தப் படைகளைக் கொன்றுவிட்டு விமான நிலையத்தின் பெரும்பாலான பகுதிகளை தாங்கள் பிடித்துவிட்டதாகஅமெரிக்காவின் 3வது இன்பான்ட்ரி படையின் முதல் பிரிகேட் படை தெரிவித்தது.

இந் நிலையில் விமான நிலையத்தை அமெரிக்கப் படைகள் கைப்பற்றவில்லை எனவும் பொய்யான செய்தியை அமெரிக்காபரப்பி வருவதாகவும் ஈராக்கிய ராணுவம் கூறியது. இன்று காலை 7.30 மணிக்கு பாக்தாதில் உள்ள சர்வதேச நிருபர்களை ஈராக்கியதகவல் தொடர்புத்துறை இந்த விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றது.

அந்தக் குழுவில் இருந்த பி.பி.சி. செய்தியாளர் ஆண்ட்ரூ கூறுகையில், விமான நிலையத்தின் மிக அருகே நாங்கள் அழைத்துச்செல்லப்பட்டோம். அந்த விமான நிலையம் இன்னும் ஈராக்கிய வீரர்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. சுமார் 50 லாரிகளில்ஈராக்கிய வீரர்களும், டாங்குகள், பீரங்கிகளும் குவிக்கப்பட்டுள்ளன.

பெரும் தாக்குதலுக்கு ஈராக்கிய ராணுவம் தயாராவதை உணர முடிந்தது. அங்கு அமெரிக்கத் தாக்குதலுக்கான சத்தத்தை கேட்கமுடியவில்லை என்றார்.

இன்று காலை தான் மோதல்:

இதற்கிடையே பாக்தாத் நேரப்படி இன்று காலை 8.00 மணிக்குத் தான் விமான நிலையத்தின் மீது அமெரிக்கப் படைகள்தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக பி.பி.சி. கூறியுள்ளது.

விமான நிலையத்தை தென் பகுதியில் இருந்து அமெரிக்க ராணுவம் தாக்க ஆரம்பித்துள்ளதாகவும் அதை எதிர்த்து ஈராக்கியப்படைகள் தாக்குதல் நடத்தி வருவதாகவும் தெரிகிறது. இத் தாக்குதலில் பெரும் எண்ணிக்கையிலான ஈராக்கிய வீரர்கள் வரைபலியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கார்களில் வந்த ஈராக்கிய தற்கொலைப் படைகள் அமெரிக்க டாங்குகள் மீது மோத முயன்றதாகவும் ஆனால், அந்தவாகனங்களை அமெரிக்க ஹெலிகாப்டர்கள் குண்டுகளை வீசி சிதறடித்தன எனவும் பென்டகன் கூறியுள்ளது.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+