பாக்தாதை நெருங்கும் அமெரிக்கப் படைகள்

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்:

பாக்தாதை நோக்கி அமெரிக்கப் படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன.

நேற்று சுமார் 10 கி.மீ. தொலைவு வரை பாக்தாதை நெருங்கிவிட்ட இந்தப் படைகள் கடும் ஈராக்கிய எதிர்ப்பை சந்தித்துவருகின்றன. முன்னேறி வரும் இந்தப் படைகளை நோக்கி ஈராக்கிய பீரங்கிகள் நெடுந்தொலைவில் இருந்து குண்டுமழைபொழிந்து வருகின்றன.

அதே போல பாஸ்ரா நகரிலும் தொடர்ந்து ஈராக்கியப் படைகளுக்கும் பிரிட்டிஷ் படைகளுக்கும் இடையே மோதல் நடந்துவருகிறது. இன்னும் இந்த நகரை பிரிட்டிஷ் படைகளால் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியவில்லை.

இதற்கிடையே பாக்தாத் நகரை அமெரிக்காவால் பிடிக்க முடியாது என ஈராக்கிய துணைப் பிரதமர் தாரிக் அஜீஸ் கூறியுள்ளார்.இந்த நகருக்குள் நுழையும் அமெரிக்காவுக்கு பெரும் உயிரிழப்புகள் ஏற்படும் என இத்தாலிய டிவிக்கு அளித்த பேட்டியில்கூறியுள்ளார்.

அமெரிக்காவின் இன்பான்ட்ரி படையினர் தெற்குப் பகுதியில் இருந்தும், மெரைன் படையினர் தென் கிழக்கில் இருந்தும்பாக்தாதை நோக்கி முன்னேறி வருகின்றன. இந்தப் படைகளின் குண்டுவீச்சுத் தாக்குதல்களில் அப்பாவி மக்கள்பலியாகியுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இதனால் பாக்தாத் நகர மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. போர் தொடங்கியது முதல் இதுவரை 500அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னேறி வரும் அமெரிக்கப் படைகளிடம் வழியில் பல ஈராக்கிய வீரர்கள் சரணடைந்து வருவதாகவும் பென்டகன் கூறியுள்ளது.அமெரிக்க- பிரிட்டிள் படைகளிடம் 9,000 ஈராக்கிய போர்க் கைதிகள் சிறைபட்டுள்ளதாக பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் ஜெப்ஹூன் கூறியுள்ளார்.

அதே நேரத்தில் நாட்டின் வட பகுதியில் அமெரிக்க ஆயுத உதவிகளுடன் குர்து இன போராளிகள் ஈராக்கியப் படைகளுடன்மோதி வருகின்றன. இந்த போராளிக் குழுக்கள் வட பகுதி நகர்களான மொசுல் மற்றும் கிர்குக்கை நோக்கி சிறு குழுக்களாகமுன்னேறி வருகின்றன.

நேற்று மாலையில் ஆரம்பித்து இப்போது வரை பாக்தாதின் புற நகர்ப் பகுதிகளில் தொடர்ந்து துப்பாக்கிகள்வெடிக்கும் சத்தமும் பீரங்கிகள் சத்தமும் கேட்டுக் கொண்டுள்ளது. நகருக்குள் நுழையும் அமெரிக்கப்படைகளுக்கும் ஈராக்கியப் படைகளுக்கும் இடையே நடந்து வரும் மோதல் தான் இது என்று தெரிகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+