ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனிக்கு அமெரிக்கா தடை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

ஈராக்கை மறுசீரமைக்க அமெரிக்க நிதியுதவியில் செயல்படும் திட்டப் பணிகளில் பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, சிரியா ஆகியநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு இடம் தரக் கூடாது என அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ஈராக் மீது போர் தொடுக்கும் அமெரிக்காவின் தீர்மானத்தை ஐ.நா. சபையில் வீடோ அதிகாரத்தைக் கொண்டு ரத்து செய்யப்போவதாகக் கூறியதால் ரஷ்யா, பிரான்ஸ் மீது அமெரிக்கா கடுப்பில் உள்ளது.

அதே போல போரை தீவிரமாக எதிர்த்த ஜெர்மனி, ஈராக்குக்கு ஆயுத உதவிகள் தந்த சிரியா ஆகியவற்றின் மீதும் கோபத்தில்உள்ளது அமெரிக்கா.

இதையடுத்து இது போன்ற தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. ஈராக் போருக்காகவும்மறுசீரமைப்புக்காகவும் 80 பில்லியன் டாலர்களை ஒதுக்கும் தீர்மானத்தையும் அமெரிக்க நாடாளுமன்றம் நேற்றுநிறைவேற்றியது.

இந்தியா கோரிக்கை:

ஈராக்கில் போர் முடிந்த பிறகு அந் நாட்டின் சொத்துக்களை எந்த நாடும் உரிமையாக்கிக் கொள்ளக் கூடாது. அந் நாட்டின்இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடக் கூடாது என அமெரிக்காவுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறுகையில், ஈராக் விஷயத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை. போரைஆதரிக்கவில்லை. இப்போது போர் ஆரம்பித்துவிட்ட நிலையில் ஈராக்கிய மக்களுக்கு விரைவில் நல்ல தீர்வு கிடைக்க வேண்டும்என்று விரும்புகிறோம்.

ஈராக்கில் அமெரிக்கா தலைமையில் அரசு அமைவதை ஆதரிக்க முடியாது. அங்கு ஐ.நா. தலைமையில் தான் எதுவும் நடக்கவேண்டும் என்றார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+