ஈராக்கின் 2,500 ரிபப்ளிகன் கார்ட் படைகள் சரண்?
பாக்தாத்:
பாக்தாத் நோக்கி முன்னேறிச் செல்லும் அமெரிக்கப் படைகளிடம் ஈராக்கின் முக்கியப் படையான ரிபப்ளிகன் கார்ட் படைப்பிரிவைச் சேர்ந்த 2,500 பேர் தங்களிடம் சரணடைந்துவிட்டதாக பென்டகன் கூறியுள்ளது.
சதாம் உரை:
இதற்கிடையே இன்று ஈராக்கிய மக்கள், வீரர்களுக்கு தகவல்துறை அமைச்சர் சைத் அல் சகாப் மூலமாக ஒரு செய்தியை அதிபர்சதாம் ஹூசேன் வெளியிட்டார். அதை சகாப் ஈராக்கிய டிவியில் படித்தார்.
அதில், நம் தலைநகரை நோக்கி வரும் அமெரிக்க- பிரிட்டிஷ் படைகளை விரட்டி அடியுங்கள். நமது தலைநகருக்குள் நுழைந்தால்அவர்களை சுற்றி வளைத்துத் தாக்குங்கள். உங்களது வாள்களை உருவிக் கொண்டு வீதிகளுக்கு வாருங்கள். இந்தஊடுருவல்காரர்களை இரவும் பகலும் தாக்குங்கள். இறைவன் துணையோடு வென்று காட்டுவோம்.
இந்தப் போர் நமது நாட்டின் தலையெழுத்தையும் அமெரிக்கா- பிரிட்டனின் தலையெழுத்தையும் மாற்றிக் காட்டப் போகிறது.போர்களில் தலைநகரங்களின் பங்கு மிக முக்கியமானது. தலைநகர் வென்றால் தேசமே வெல்லும் என்று கூறியுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications