லஞ்சம் வாங்கி கைதான போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு
சென்னை:
வட்டிக் கடைக்காரரை மிரட்டி லஞ்சம் பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கர்ணனுக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
விழுப்புரத்தைச் சேர்ந்த வட்டிக் கடைக்காரரைக் கடத்தி வந்து, பின்னர் அவரை மிரட்டி ரூ.2 லட்சம் வரை லஞ்சம்பெற்றதாக சென்னை-அண்ணாசாலை போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த கர்ணன் மற்றும் மூன்று ஏட்டுக்கள் கைதுசெய்யப்பட்டனர்.
போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கைது சம்பவத்தைத் தொடர்ந்து கர்ணனுடையவீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அவருடைய சொத்து விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டன.இதற்கு முன் லஞ்சப் பணம் ஏதும் பெற்றாரா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே அவர் தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் உயர் நீதிமன்றம் இன்று கர்ணனின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது.
கைது செய்யப்பட்ட கர்ணன் தற்போது சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications