பிச்சுக்கிட்டு போகும் பி.எஸ்.என்.எல். செல்போன் விற்பனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை நகரில் பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கியது.முதல்நாளே ஆக்டிவேட் செய்யப்பட்ட 2,019 சிம்கார்டுகள் விற்றுத் தீர்ந்தன.

தமிழகத்தின் சில நகரங்களில் ஏற்கனவே பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை நடைமுறையில் உள்ளது. தற்போதுதான் சென்னை நகரில் இது அறிமுகமாகியுள்ளது.

ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்ததால் வாடிக்கையாளர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்தனர். ப்ரீ-பெய்ட்சிம்கார்டுகளின் விற்பனை வெள்ளிக்கிழமைத் தொடங்கியது.

நகரில் உள்ள 6 வாடிக்கையாளர் சேவை மையங்களில் இந்த சிம்கார்டு விற்பனை தொடங்கியது. 6மையங்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது. சென்னையில் முதல் கட்டமாக மொத்தம் 1.30 லட்சம்ப்ரீ-பெய்ட் இணைப்புகள் கொடுக்கப்படவுள்ளன.

இவற்றை வாங்கிவிட பெரும் கூட்டம் கூடியது. முதல் நாளே 2,019 சிம் கார்டுகள் விற்றுத் தீர்ந்தன. இதுதவிரப்ரீபெய்ட் சேவை கேட்டு 78,600 விண்ணப்பங்களும் வந்துள்ளதாக தொலைத் தொடர்புத்துறை கூறியுள்ளது.இவர்களுக்கும் இன்னும் சில நாட்களில் இணைப்பு வழங்கப்பட்டுவிடும்.

ஏப்ரல் 15ம் தேதி முதல் போஸ்ட் பெய்ட் கார்ட் இணைப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளன.பி.எஸ்.என்.எல். செல்போனுக்கு வாடிக்கையாளர்கள் காட்டிய ஆர்வத்தைப் பார்த்து அதிகாரிகள் திக்குமுக்காடிப்போயுள்ளனர்.

கூடுதல் சேவை மையங்கள் திறப்பது குறித்தும் தமிழகத்துக்கு கூடுதல் எண்ணிக்கையில் செல்போன் இணைப்புகள்கொடுப்பது குறித்தும் பி.எஸ்.என்.எல். யோசித்து வருகிறது.

ஏற்கனவே உள்ள பி.பி.எல்,, ஏர்-டெல், ஏர்-செல் ஆகியவை தவிர ரிலையன்ஸ், டாடா, பாரதி ஆகியநிறுவனங்களும் செல்போன் சேவையில் குதித்துள்ளன. குறிப்பாக ரிலையன்ஸ் கடும் போட்டியைஏற்படுத்தியுள்ளது.

இந் நிலையில் அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். தனது செல்போன் சேவையைத் தொடங்கி போட்டியைகடுமையாக்கியுள்ளது. வீட்டில் லேன்ட் லைன் தொலைபேசி இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை தந்துவருகிறது பி.எஸ்.என்.எல். அந்தத் தொலைபேசியுடன் சேர்த்து செல்போனுக்கும் கட்டணம் வசூலிக்கத்திட்டமிட்டுள்ளது.

மேலும் இந்த இரு தொலைபேசிகளுக்கும் இடையில் பேசப்படும் கால்களுக்கு கட்டணம் இல்லை எனவும்அறிவித்துள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+